#திருமண_வயதை_கடந்த_ஓர்_பெண்ணின்_மன_அழுத்த_வெளிப்பாடு!
பெண் பார்க்கும் படலம் தொடங்கி பல வருஷமாச்சி...
பார்க்க வந்த அனைவரையும் கணவனாய் நினைத்துதான் காபி கொடுத்தேன்...
அடுத்த ஐந்து நிமிடங்களில் அறுக்கப் பட்டது என் தாலி...
சொல்லியனுபுறோமென்று சொல்லி சென்ற வார்த்தைக் கொண்டு!
நான் மலர்ந்தும் வாசம் வீசாத மலரோ...
தேடி தேனிக்கள் வரவேண்டாம்...
வண்டுகளுக்கு கூடவா வழி தெரியவில்லை!
கல்யாண சந்தையில் விலை படியாத பொம்மை நான்...
படைத்தவனுக்கு பாரமாய் அவனிடத்திலே!
கூட படித்தவள் கூப்பிடுகிறாள்...
அவள் பிள்ளை ஆளாகிவிட்டாலென்று!
காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது என்னை சுமந்து கொண்டு...
அழகை மட்டுமே அவையில் வைத்த நான்_இன்று
அவற்றையும் அடமானம் வைத்துவிட்டேன் என் அகவையிடம்!
கட்டி முடிக்கப்பட்ட என் கருவறை காலியாய் கிடக்கிறது...
குடி போக குழந்தையின்றி!
என் தலையணையை கேட்டுப்பாருங்கள்...
கணவனாய் நினைத்து அவற்றுடன் நான் புரிந்த காதல் காவியத்தை!
பேருந்தில் உரசி சென்றவனுக்கு தெரிவதற்கில்லை...
அவன் மூட்டி சென்ற காமத்தீயை தணிக்க நான் தவிக்கும் தவிப்பு!
நான் விளை நிலம்தான்...
விதைக்க ஆளில்லாமல் தரிசாய் மாறிய
தமிழ்த்தாயின் எழுத்துப்பிழை!
இராமன் வேண்டாம்...
இராவணன் கூட வரவில்லை....
சீதனம் இல்லாத இந்த சீதையை தூக்கிச்செல்ல...
தந்தையே!
பாரமாய் இருந்தால் சொல்லி விடுங்கள்...
இறக்கி வைத்து விடுகிறேன்...
என் இறுதி மூச்சை!
#மீள்👈
0 Comments
Thank you