மனைவி : என்னங்க ஏன் இப்படி ஓடிவர்றீங்க?
.
கணவன் : வழியில ஒருத்தன் வம்பு பண்ணி என்னைய அடிக்க வர்றான்...
.
மனைவி : நீங்க இருங்க நான் பார்த்துக்கறேன்...
(வாசலில் சென்ற மனைவி.....)
.
மனைவி : டேய்....எவண்டா அவன் என் புருஷன் மேலேயே கைய வைக்கிறது..ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கி ஒத்தை வந்து நில்றா பாப்போம்...கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சியா.....துடப்பக்கட்டை பிஞ்சிரும்.....
(பதில் சொல்ல ஆளில்லை....உள்ளே வந்த
மனைவி...கணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து...)
.
மனைவி : ஏங்க.....ஏன் அழுவுறீங்க...?
.
கணவன் : அதில்லமா...இவ்வளவு நாளா நீ என்ன அடிக்கும்போதெல்லாம் உன்னய நான் எதிரியாதான் பாத்தேன்...ஆனா இப்போத்தான் உன் பாசம் எனக்கு புரிஞ்சதுமா....
.
மனைவி : ஆமாங்க....உங்களை எல்லாம் அடிக்கனும்னு எங்களுக்கு என்ன ஆசையா? பொண்ணுங்க நாங்க தைரியமா, பிரச்சினை வரும்போது சமாளிக்கத்தான்,அப்பப்போ கணவன்மார்களை அடிச்சு ஒத்திகை பார்த்துக்குறோம்...
.
வேற எங்க போயி யாரை அடிக்க முடியும்,
கோவம் இருக்குற எடத்துலதாங்க பாசமும் இருக்கும் ..
இத புரிஞ்சுக்காம , பொண்டாட்டினாலே ஏதோ அடிக்கறதுக்கு பொறந்தா மாதிரி எல்லா ஆம்பிளைகளும் ஏன் நினைக்கிறாங்க....🤪🤪🤪🤪
0 Comments
Thank you