HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மகிழ்ச்சியான #இல்லற_வாழ்க்கைக்கு….❗❗❗

#மகிழ்ச்சியான 
#இல்லற_வாழ்க்கைக்கு….❗❗❗

திருமணம் செய்துகொள்ளும் முன்னர் ஆண், பெண் இருவருக்குமே சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் அவசியம்
என்பதும், இதனால் பிற்காலத்தில் எழும் தேவையற்ற பிரச்சனைகளை முன்கூட்டியே தடுத்துவிடலாம் என்கிற கருத்தும் தற்போது பரவலாக ஏற்பட்டு வருகிறது.

#இது_சரியா❓

என்கிற கேள்வியும், திருமண வயதில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள நினைக்கிற மேலும் பல சந்தேகங்கள் தொடர்பான விளக்கங்களும்…!!!??

⭐உறவு முறைகளில் திருமணம் செய்துகொண்டால் குழந்தை பிறப்பு மற்றும் பிறக்கும் குழந்தைக்கு என்னென்ன குறைபாடுகள் ஏற்படும்❓

⭐எதனால் அப்படி ஏற்படுகிறது❓

உறவு முறைகளில் திருமணம் செய்துகொண்டால், ஒரே விதமான உயிர் அணுக்கள் (identical genetic materials) தம்பதியினரிடையே சேர்கிறது. 

❗இதனால்……… 

இதய நோய், 

மூளை வளர்ச்சி குறைபாடு, 

முகம், உதடு மற்றும் தாடைகளில் 

முழு வளர்ச்சி ஏற்படாத குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

❓ஆண்மைக் குறைவு மற்றும் ஆண்மலட்டுத்தன்மையை திருமணத்திற்கு முன் எப்படித் தெரிந்துக்
கொள்வது…❗

தற்போது 50% ஆண்கள் ஆண்மைக் குறைவு மற்றும் மலட்டுத் தன்மையுடன் விளங்குகிறார்கள். 

💔புகை பிடித்தல், 

💔மது அருந்துதல், 

💔போதை வஸ்துகளை உபயோகப்படுத்தல், 

💔வெப்ப சூழ்நிலையில் அதிக நேரம் வேலை செய்வது, 

💔தினமும் வெகுதூரம் சைக்கிளில் & பைக் பயணம் செய்வது, 

💔புட்டாலமை (mumps) 

போன்றவற்றால் இது ஏற்படுகிறது. 
திருமணத்திற்கு முன்பே ஆண்கள் மருத்துவரை அணுகி, தங்களின் விந்துவை பரிசோதனை செய்துகொண்டால், தங்களுக்கு அந்த பாதிப்பு இருக்கிறதா என்பதையும், அதை எப்படி நிவர்த்தி செய்துகொள்வது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

❓பெண் மலட்டுத்தன்மை மற்றும் கருப்பையில் உள்ள குறைபாடுகளை பற்றி அறிந்து கொள்ள மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது…❗

⚠கரு முட்டையில் நீர்க் கட்டிகள், 

⚠ரத்தக் கட்டிகள், 

⚠கொழுப்புக் கட்டி 

⚠கருப்பை முழு வளர்ச்சி அடையாமல் இருப்பது.

பிரச்சினை போன்றவைகள் இருந்தால் பெண் மலட்டுத் தன்மை ஏற்படும். 
இவற்றை திருமணத்திற்கு முன்பே மருத்துவரை அணுகி #ஸ்கான் மற்றும் தகுந்த #பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது. 

ஒருவேளை ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை சரிசெய்துகொண்டு திருமணத்தை எதிர்நோக்கலாம்.

>❓எந்தெந்த இரத்தப் பிரிவுகளில் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம்…❗

>❓செய்துகொள்ளக்
கூடாது…❗

★அந்த மாதிரி எந்த நிபந்தனையும இல்லை. 

👉ஆனால்……

💗நெகட்டிவ் ரத்த பிரிவு உள்ள பெண்ணும், 

💗பொசிட்டிவ் ரத்த பிரிவு உள்ள ஆணும் 

திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் இரத்தப்பிரிவு பொசிட்டிவாக இருக்கும் பட்சத்தில், அக்குழந்தைக்கு #மஞ்சட்காமாலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இதற்கு மருந்துகள் உள்ளன.

❓இரத்தத்தில் ஆன்டிபாடி, ஆன்டிஜென் பிரிவுகள் என்றால் என்ன? 

❓இதற்கும் தாம்பத்தியத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? 

❓அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

நம் உடலில் எந்தவிதமான கிருமிகள், அணுக்கள் உள்ளே நுழைகிறதோ அது ஆன்டிஜென் எனப்படுகிறது. 

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்காக சுரப்பதை ஆன்டிபாடி என்கிறோம். 

தாம்பத்தியத்தில் விந்து அணுக்களுக்கு எதிராக ஒரு பெண்ணின் ஆன்டிபாடி சுரக்கும். இதையே மருத்துவத்தில் Antisperm Antibodies என்பர். இதுவே குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

அறிவுத் திறமை அதிகமுள்ள, புத்திசாலியான, சுறுசுறுப்பான, ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்
வதற்கு திருமணத்திற்கு முன்னர் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருந்துகள், சிகிச்சை முறைகள் உள்ளனவா? 

❓அதைப் பெறுவதற்கு எந்தமாதிரியான திருமணம் செய்துகொண்டால் நல்லது?

இதற்கு திருமணத்திற்கு முன்பே ஆணும் பெண்ணும் மருத்துவரை அணுகி Preconceptional counselling மேற்கொள்ள வேண்டும். நல்ல உடற்பயிற்சி, மனதில் தூய்மை, சரியான உணவு முறை இருத்தல் அவசியம். சொந்தத்தில் திருமணத்தைத் தவிர்த்தல் நல்லது.

❓ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம் எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்?

ஆணைவிட பெண் 3லிருந்து 5 ஆண்டுகள் குறைந்த வயதுடையவளாக இருத்தல் நலம்.

❓அதிக வயது வித்தியாசம் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் ஏதேனும் உண்டோ?

மாற்றுக் கருத்துக்கள் எழும். இதனால், கணவன் மனைவி உறவில் சிக்கல் எழும்.

❓திருமணம் செய்துகொள்ள மருத்துவ ரீதியாக சரியான வயது வரம்பு கணிக்கப்
பட்டுள்ளதா? 

❓எதனால் அது?

ஆண்களுக்கு 25 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளும், 

பெண்களுக்கு 18 வயதிலிருந்து 23 வயதிற்குள்ளும் திருமணம் நடைபெறுவதே சிறந்தது. 

மேற்கண்ட வயதிற்குள் திருமணம் செய்துகொள்வதால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கும், தாம்பத்திய உறவில் அனுசரிப்பும் இருக்கும்.

❓குழந்தை பிறப்பை தாமதமாக்குதல் மற்றும் ஒத்திப்போடுதல் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

இதனால்…………

மலட்டுத்தன்மை, 

கரு கலைந்துபோவது, 

மூளை வளர்ச்சி
குறைபாடுள்ள 
குழந்தை பிறத்தல், 

இரத்தக் கொதிப்பு, 

சர்க்கரை நோய் அதிகரிக்கிறது. 

30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் வரும்.

❓குழந்தையின் நிறம், உயரம், பருமன் போன்றவை தாயின் உடல் அமைப்பைப் பொருத்து அமையுமா, தந்தையின் உடல் அமைப்பை பொருத்து அமையுமா? 

❓அல்லது அதில் சதவீத பங்களிப்பு ஏதேனும் உள்ளதா?

இதைக் கணிக்க முடியாது.

❓குழந்தையின் 
குண நலன்கள் யாரைப் பின்பற்றி அமையும்?

இது தாய், தந்தை இருவரையும், அவர்களின் முன்னோர்களையும், சுற்றுச் சூழலையும் பொருத்து அமையும்.

⭕⭕ கலப்புத் திருமணங்களை மருத்துவ ரீதியாக அங்கீகரிப்பது ஏன்❓

இவ்வகைத் திருமணங்களால் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறு அணுக்கள் (Different genetic materials) சேர்கின்றன. இதனால் அறிவுத் திறமையான குழந்தைகள் பிறக்கின்றன.

❓பிறக்கப்போகும் குழந்தைகளை எந்தெந்த பரம்பரை நோய்கள் தாக்கும்? 

❓அப்படி தாக்காமலிருக்க, திருமணத்திற்கு முன் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

இதய சம்பந்தமான நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் போன்றவைகள் தாக்கும் அபாயம் உண்டு. 

திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் தங்களுக்கு இந்த பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் சென்று உரிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நல்லது.

❓உடல் குறைபாடு உள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தப் பாதிப்பு வருமா?

இதற்கான வாய்ப்பு 25 முதல் 35 விழுக்காடு இருக்கிறது.

⭕நம்நாட்டு கலாச்சாரத்திற்கு திருமணத்திற்கு முன்னே ஆணுக்கும் பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை அவசியம் என்பது கட்டாயமாக்கப்
படுவது நல்லதா, கெட்டதா?

நல்லதே! ஏனென்றால் திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் குழந்தையின்மை, தாம்பத்தியத்தில் ஏற்படும் சிக்கல்கள், இதனால் ஏற்படும் மன உளைச்சல் போன்றவற்றை முன்கூட்டியே தடுத்துவிடலாம்.

⭕குழந்தையின்மை என்பது பரம்பரை குறைபாடா?

இல்லை, ஆனால் பெண்களின் கருமுட்டையில் தோன்றும் நீர்கட்டிகள் மட்டும் பரம்பரை குறைபாடு காரணமாகத் தோன்றுகிறது.

⭕ஜெனரல் மெடிக்கல் செக்கப் இருபாலருக்கும் திருமணத்திற்கு முன்பு அவசியமா❓
இதனை எப்படி புரியவைப்பது❓

நிச்சயமாக இது அவசியம். இதைக் கவுன்சிலிங் மூலமாக புரியவைக்க முடியும்”
இது வெறும் கேள்வி பதில் பகுதி மட்டுமல்ல…

திருமணம் செய்யப்போகிற
வர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டியும் ஆகும்.

★திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்குமே  செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு தான் என்பது ஆய்வுகளின் முடிவு.  

குழந்தை பிறந்து விட்டது என்பதுடன் உறவில் முழுமையாக புரிதல் உள்ளவர்கள் என்று சொல்லிவிட முடியாது.  

மருத்துவர்களிடம் ஆலோசனை என்று வருபவர்கள் கேட்க்கும் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்....!!? 

இதில்  படித்தவர்களின் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்றே  தோன்றுகிறது. 

ஏன் இப்படி தெளிவு இல்லாமல் , புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்று தெரியவில்லை.

குடும்ப வாழ்வில் பொருள் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட கணவன் , மனைவி இருவருக்குள் கருத்து வேற்றுமை இன்றி வாழ்வது மிக முக்கியம். அந்த கருத்து வேற்றுமை இருவரின் அந்தரங்கம் பற்றியதாக  இருந்துவிட்டால்....

குடும்பத்தின் மொத்த நிம்மதியும் போய்விடும். 

செக்சை பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லை,காரணம் நாம் வளர்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயம். 

சந்தேகம் ஏற்பட்டால் பிறரிடம் கேட்க தயக்கம், அச்சம், சமூகத்தில் இதை பேசுவது தவறு, பாவம் என்று கூறப்பட்டு வந்ததால் நாமும் அப்படியே பழகிவிட்டோம்.

கணவன் மனைவி இருவரும் கூட தங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களை பரிமாறி கொள்வது இல்லை. இதன் விளைவு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு பிரச்சனைகள் பூதாகரமாக எழுகின்றன. இதன் பின்னர் மோசமான முடிவுகளில் கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. 

பாலியல் தொடர்பான குற்றங்கள், தவறான உறவுகள் போன்றவை ஏற்பட சரியான செக்சை பற்றிய அறிவு இல்லாதது தான் காரணம்.

ஒரு சில குழப்பங்களும், சிக்கல்களும் இந்த விசயத்தில் இருக்கின்றன. இந்த தொடர் பதிவில் அவற்றை விளக்குவதின் மூலமே இந்த தொடர் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.

#உச்சகட்டம் (ஆர்கஸம் )

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் உறவில் மிக முக்கியமானது உச்சகட்டம் எனப்படும்  இறுதி நிலையாகும். 

ஆண்களை பொறுத்தவரையில் அணுக்கள் வெளியேறும் அந்த தருணத்தில் அவர்கள் உச்சகட்டம் அடைந்து விடுகிறார்கள்.  

ஆனால் பெண்களை பொறுத்தவரை இது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.

இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன என்பது கூட பல திருமணம் ஆன பெண்களுக்கும் தெரியாது என்பது தான் நிதர்சனம். 

* அப்படி என்றால் என்ன..??

* அந்த உணர்வு எப்படி இருக்கும் ??

* அந்த உணர்வு  கட்டாயம் உணரபட்டுத்தான் ஆகவேண்டுமா ??

* உச்சகட்டம் ஆகவில்லை என்றால் அதன் பாதிப்பு என்ன ??

* பெண்களின் அந்தரங்க உறுப்பில் கிளிடோரிஸ் என்ற சிறு பகுதியில் தான் பல நூற்றுக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் பின்னிபிணைந்து இருக்கின்றன என்பது ஆச்சரியமான ஒரு விஷயம் தான். அதிக உணர்ச்சி மிகுந்த பகுதியும் இதுதான். அந்த பகுதி தூண்டப்பட்டு அடையும் இன்பமே உச்சகட்டம் ஆகும். 

* உச்சகட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில், அங்கே மட்டுமே ஏற்படக்கூடிய நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன.  

இந்த உணர்வலைகளில் உடல் அதிக சூடாக மாறிவிட., அப்படியே சப்த நாடிகளும் அடங்கி மயக்கமான ஒரு நிலைக்கு கொண்டு போய்விடும். உடல் பறப்பதை போன்ற ஒரு பரவச நிலைக்கு தள்ளபடுவதை நன்றாக உணர முடியும். 

* வெறும் உடலுறவு மட்டுமே ஒரு போதும் 'முழு திருப்தியை  ஒரு பெண்ணுக்கு தராது' உச்சகட்டம் அடைந்த ஒரு பெண்ணால் மட்டுமே  மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமாக இருக்க முடியும். அதை எட்டமுடியவில்லை இருந்தும் நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று ஒரு மனைவி சொல்கிறாள் என்றால் அது முழு உண்மை கிடையாது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை பற்றி
தெரியாதவர்களாக இருக்கலாம் அவ்வளவே. 

* இங்கே நான் சொல்ல போகிற விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்...
ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்... உறவில் ஆணோ, பெண்ணோ உச்சகட்டத்தை அடையமுடிய
வில்லை என்றால் #அனார்க்கஸ்மியா (Anorgasmia) என்கிற செக்ஸ் குறைபாட்டில் தான் கொண்டு போய்விட்டுவிடும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் எச்சரிக்கை.  .....??!   

ஆனால் உச்சகட்டம் போக முயற்சி செய்தும் போக முடியாத ஒரு நிலையும் இருக்கிறது. இதற்கு உளவியல் காரணங்கள்  இருக்கலாம்....

💔 சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், 

💔 உறவை குறித்த முறையான தெளிவின்மை, 

💔 உறவை பற்றிய அச்சம் 

இவை போன்ற சில காரணங்களும்  உச்சகட்டம் அடைய முடியாமல் தடுக்கலாம். இதில் எதில் குறை என்று பார்த்து மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்வது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

எப்படி பார்த்தாலும் கணவன் மனைவி உறவில் அந்தரங்க உறவு என்பது அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்ந்து முடியக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு இல்லை. 

அங்கே சரியாக  நடைபெறவில்லை  என்றால் அதன்  எதிரொலி பல வடிவத்தில் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதை தம்பதியினர் மறந்து விடகூடாது. 

கணவன் தனது மனைவியை உச்சகட்டம் என்றதொரு அற்புத உணர்விற்கு அழைத்து செல்வது மிக அவசியம்...

அதன் பிறகே தன் தேவையை நிறைவேற்றி கொள்வதே மிக சரியான தாம்பத்திய உறவு நிலையாகும். 

👉அப்போதுதான் கணவன்  தன் மனைவியை வென்றவன் ஆகிறான்...!! 

ஆனால் ஆண்களில் சிலருக்கு ஆரம்ப நிலையிலேயே தன் தேவையை முடிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம்  (அவர்களின் உடல்நிலை காரணமாக இருக்கலாம் ) அந்த நேரம் மனைவியை முழு திருப்தி படுத்த இயலாமல் போகலாம்....

அப்படியான நிலையில் இருப்பவர்கள் என்ன காரணத்தினால் தங்களால் அதிக நேரம் இயங்க முடியவில்லை என்பதை பற்றி தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும் இல்லையென்றால்  மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.  

பெண்ணின் செக்ஸ் வாழ்க்கை திருப்தியாக இல்லையென்றால்  அப்பெண்ணின் பொது வாழ்க்கையும் , குடும்ப வாழ்கையும், அவளின் தன்னம்பிக்கையும் வெகுவாக குறைகிறது, பாதிக்கப்படுகிறது.

எதிர்பார்ப்புகளும்  ஏமாற்றங்களும் குடும்பத்தில் ஏற்படும் போதுதான் விரிசல்களும் அதிகரிக்கிறது.  

ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் நிறைவேறாத தேவைகள், கசப்பான அனுபவங்கள் போன்ற காரணங்கள் தான் வேறு தவறான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. 

❗தடம் மாறுகிறார்கள். 

❗ஒரு கட்டத்தில் 'இக்கரைக்கு அக்கறை பச்சை' என்று புரிய வரும் போது………

❗வருடங்கள் ஓடி போயிருக்கும்....…

தவறான உறவில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.

'ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்திய உறவு சரி இல்லை' என்றால் அதன் முடிவு தவறான வேறு உறவு தான் என்று அர்த்தம் இல்லை.  

#ஆனால்……

இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் மிக மிக அதிகம் என்பதை மறுக்க முடியாத உண்மை.!!!???

Post a Comment

0 Comments