♥திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!!!!
♥பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா?
♥ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்றே சொல்லலாம்....
♥ஆனால் இப்படி இழப்பதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அப்படி வெளிக்காட்டினால், பின் திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் போய்விடும் என்பதால் தான். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் உள்ள ஆண்கள் தான் திருமணத்திற்கு பின் நிறையவற்றை தியாகம் செய்கின்றனர்.
சரி, இப்போது அப்படி திருமணத்திற்கு பின் ஆண்கள் எவற்றையெல்லாம் இழக்கின்றனர் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்த்து சரிதானா என்று சொல்லுங்கள்.
♥திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.
♥ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது....
♥பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.
♥திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.
♥பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.
♥முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், அதனை 90% குறைத்து திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.
0 Comments
Thank you