♥பெண் பார்க்கும் படலம்
♥அரும்பாகி பின் மலராகி
மணம்வீசும் தருணம் அதில்
அடக்கம் தானே வர...
அகங்காரம் நெருங்க மறுக்க
அகத்தில் அன்போடு
அனைவரையும் கவரதொடங்க ...,
ஆரம்பிக்கின்றது பெண் பார்க்கும்
படலம் .!
♥தரகரென ஒருவர் வர
தாய் தன்மகளை போற்றி புராணம்
பாட ,
புராணம் கேட்ட தரகர் சும்மா
இருப்பாரோ .?
தங்க பையன் தன்வசம் இருப்பதாய்
வண்டி வண்டியாய்
பொய்யுரைக்க
உறுதியானது பெண் பார்க்கும் படலம்.!
♥வீட்டிற்கு வெள்ளையடித்து
விதவிதமாய் பலகாரம் செய்து
முக்கிய உறவுகளை அழைத்து வந்து
வாசல் பார்த்து காத்திருக்க ..
♥பட்டுவேட்டி கட்டி பரிதாமாய்
ஒருவரும்
பட்டு புடவையில் பகட்டாய்
ஒருவரும்
♥புரிந்துகொள்ள முடிகிறது
மாப்பிள்ளையின் பெற்றோர் என ,
அடுத்து குட்டையோ நெட்டையோ
வெள்ளையோ சொல்லையோ
எப்படியோ ஒருவன் அவன் தான் மாப்பிள்ளை,
♥வந்தவரை பவ்வியமாய் வரவேற்று
நடுவீட்டில் அமரவைத்து
நாக்குக்கு வக்கனையாய்
பச்சியும் சொச்சியும்
பல வித பலகாரமும்
உண்ணகொடுக்கையில்
ஒரு குரல் பொண்ணு எங்க .?
♥அம்மனுக்கு பட்டுடுத்தி
அலங்காரம் செய்தது போல்
அசைந்து வந்தாள் தேவதையாய்
♥கண்கள் படபடக்க
கால்கள் கோலமிட நாணி தலைகுனிந்து நமஸ்க்காரம்
செய்து நின்றாள்,
♥கொலு பொம்மையை பார்ப்பது போல்
கூட்டமே பார்த்து விட்டு
வீட்டு போய் தகவல் சொல்கிறோம்
முகுர்தத்திற்கு நாள் குறிக்க ,
புறப்பட்டு அவர் செல்ல
பொறுமையாய் பெண் வீட்டார்
காத்திருக்க ,
♥தகவலாய் தரகர் வந்து
பொண்ணு கொஞ்சம் குள்ளமாம்
பையனுக்கு பிடிக்கலையாம் ,
அது போனா என்ன தாயே
வைரமாய் இன்னொன்று
என்வசம் ..
♥முடிவின்றி தொடர்கின்றது
பெண் பார்க்கும் படலம் ....!!
0 Comments
Thank you