♥நிர்மலா கேட்டாள்.
♥ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே...'
♥பின்னே என்னடி... கல்யாணத்துக்கு முன்னாடியே முக்கா சொட்டை. என் அழகுக்கு திருஷ்டி பரிகாரமா? பைத்தியக்காரி! ஆம்பளைக்கு அடையாளமே வழுக்கைதாண்டி வழுக்கை விழுந்தவர்களுக்குத்தான் ஆண்மை அதிகம்னு என் புருஷன் அடிக்கடி சொல்லுவாரு.
♥போடி! என் இல்லற சாம்ராஜ்யத்தை ஆளப்போறவர் முடி துறக்காத மன்னனா இருக்கணும். முதலிரவு அறையில் தன் புது மனைவி வசுமதியைப் பார்த்து சொன்னான் பாலு.
♥வசுமதி எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி டைபாய்டு வந்தப்போ தலையில உள்ள முடி எல்லாம் கொட்டிடுச்சு. ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்த பண்ணுவாங்க. ஆனா நான் இந்த ஒரே ஒரு உண்மையைத்தான் உன்கிட்டேயிருந்து மறைச்சிட்டேன் என்ற பாலு, தலையிலிருந்த விக்கை கழற்றி கட்டிலின் மேல் வைத்தான்.
- போளூர் சி.ரகுபதி
0 Comments
Thank you