14 வார கருவாக இருக்கும்போதே உயிரிழந்து விட்ட தனது குழந்தையின் புகைப்படத்தை வெள்ளியிட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தாய், கருக்கலைப்பு செய்யாதீர்கள், உங்களுக்குள் இருப்பது ஒரு குழந்தை, அதைக் கொன்று விடாதீர்கள் என பெண்களை நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க பெண்ணான Sharran Sutherland கர்ப்பமாக இருக்கும்போது, 14 வாரக் கருவாக இருக்கும்போதே அதன் இதயத் துடிப்பு நின்று விட்டது. மருத்துவர்கள் கருக்கலைப்பு முறையில் அதை அகற்றி விடலாம் என்று கூறியபோது Sharranக்கு கோபம் வந்து விட்டது.
அது என் குழந்தை, அதை நீங்கள் ஒரு மருத்துவக் கழிவாக எறிந்து விடும்படி கூறுகிறீர்கள், நான் என் குழந்தையைப் பெற்றெடுக்கவே விரும்புகிறேன் என்று கூற, மருத்துவர்கள் அவர் விருப்பப்படியே செய்தனர்.
அந்த கருவை கையில் வாங்கிப் பார்த்த Sharran அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.
ஏனென்றால் ஸ்கேன்களில் காணப்படுவதுபோல் அது இல்லாமல், ஒரு குட்டிக் குழந்தையாகவே இருந்தது.
குட்டிக் குட்டி கை, கால்கள், அழகாக உருவான காதுகள், நாக்கு என பெரும்பாலான உறுப்புகள் உருவாகியிருக்க, அதை அவரால் கரு என்று சொல்ல இயலவில்லை.
Miran என்று அந்தக் குட்டிக் குழந்தைக்கு பெயரிட்ட Sharran, அதை வீட்டுக்கு கொண்டு வந்து, அதனுடன் நேரம் செலவிட்ட பின்னர், அவரும் அவரது கணவரும் சேர்ந்து ஒரு பெட்டியில் அதைப் போட்டு அதனுடன் hydrangeas என்னும் பூச்செடியின் விதைகளையும் போட்டு தங்கள் தோட்டத்தில் புதைத்தனர்.
ஒவ்வொரு வருடமும் அந்த செடிகள் பூக்கும்போது என் மகனை நினைவு கூற அந்த பூக்கள் உதவும் என்கிறார் Sharran.
கருக்கலைப்பு செய்யும் எண்ணத்திலிருக்கும் பெண்களுக்கு, அது வெறும் கரு அல்ல, அது ஒரு குழந்தை, அதை கொன்று விடாதீர்கள் என்னும் செய்தியையும் தெரிவிக்கிறார் Sharran.
Sharran இந்த செய்தியை புகைப்படங்களுடன் பகிர்ந்தபின், அவரது தோழி ஒருவர் தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றிருந்த எண்ணத்தையே விட்டு விட்டேன் என்று கூறியிருப்பது Sharranக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே கூறலாம்.
0 Comments
Thank you