HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கர்ப்பப்பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்?

♥கர்ப்பப்பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்?

♥நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன.

♥#கர்ப்பப்பை_கோளாறுகளின் #அறிகுறிகள் :
கருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது கணைச்சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெயை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்துகொடுக்கப்படுகிறது.

♥இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச்சூடாக மாறும். இதனால் ரத்தசோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோயிற்காக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.

♥நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள் தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்தமாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் “பாஸ்ட் புட்” கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம்.

♥நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.

♥முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய்சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.

♥நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக்கட்டி, கருப்பைக்கட்டி போன்றவைகள் உருவாகி மாத விடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.

Post a Comment

0 Comments