♥#இனிப்பு ஒரு நிமிட கதை
♥சுந்தர் தனது நண்பன் சரவணனின் திருமணத்திற்கு வந்திருந்தான். அங்கு சுந்தரின் அப்பாவும் வந்திருந்தார். சுந்தர் காதலித்து கலபு மணம் புரிந்து தனிக்குடித்தனம் சென்றதால் சுந்தருக்கும் அவன் அப்பாவுக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
♥சுந்தர் மதிய உணவு பரிமாறிக்கொண்டிருந்தான். அங்கு வந்த சரவணன் உனக்கும் உன் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கலாம். அதுக்காக இப்படியா நடந்துக்குறது? என்று கேட்டான்.
♥என்னடா சொல்றே? சுந்தர் புரியாமல் கேட்டான். எல்லா இலைக்கும் ஒழுங்கா உணவு பரிமாறின நீ. உன் அப்பா இலையில மட்டும் ஜாங்கிரி, ஐஸ்கிரீம், பழம் வைக்கலையே? என்று கேட்டான் சரவணன்.
♥என் அப்பா சுகர் பேஷண்ட். அதனால இனிப்பு ஐட்டங்களை தவிர்த்தேன். என் அப்பா .ல்லா இருந்தால் தானேநாங்க சந்தோஷமா இருக்க முடியும். அதான் வைக்கல என்றான்.சுந்தரின் பேச்சை கேட்ட அப்பா நெகிழ்ந்து போனார்.
♥எஸ்.முகம்மது யூசுப்
0 Comments
Thank you