♥#மனசு - ஒரு நிமிட கதை
♥ஸாரி டியர், இன்னைக்கும் எனக்கு வேற வேலை இருக்கு. நீங்க முன்னாடி போங்க, நான் பஸ்லயே வந்திடறேன். கவிதாவின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியப்பட்டுபோனாள். அவளது தோழி சாந்தி.
♥இந்த ஒரு வாரமாகவே அவளது நடவடிக்கையே சரியில்லை.
ஏய், என்னடி ஆச்சு உனக்கு? நானும் பத்து நாளா கவனிக்கிறேன." நீ ஏதோ ஒரு காரணம் சொல்லி குமாரோட போறதை தவிர்க்கற... அப்படிஎன்னடி பிரச்சனை உங்களுக்குள்? என்றாள் சாந்தி.
♥அதில்லடி, எனக்கும் ஆசைதான். ஜாலியா அவனோட போய் காலேஜ்ல இறஙக. ஆனா, நான் அவனோட போகாத நாளெல்லாம் நம்ம கிளாஸ்மெட் வெங்கட்டை கூட்டிட்டு போறான். பாவம்டி அவன், போலியோ காலை வச்சிட்டு, பஸ்ல வர ரொம்ப கஷ்டப்படறான்..
♥ இதைச் சொன்ன, குமாரோட மனசு சங்கடப்படுமேன்னு தான்... என்று தயங்கியவாறு சொன்னாள் சாரதா. தனது தோழியின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து பூரித்து போனாள் சாந்தி.
♥கோவை.நா.கி.பிரசாத்
0 Comments
Thank you