HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தரித்திரத்தின் அறிகுறிகள்... உஷார்

♥தரித்திரத்தின் அறிகுறிகள்... உஷார்!

♥’என்னடா இது. ஒரே தரித்திரமா இருக்கு’ என்று அலுத்துக் கொள்வோம். ’எவ்ளோ சம்பாதிச்சாலும், துடைச்செடுத்த மாதிரி காசு இருக்கமாட்டேங்குது’ என்று புலம்புவோம். ‘எப்பப் பாரு இல்ல இல்லன்னு தரித்திரம் பிடிச்ச மாதிரி’ என்று சீறுவோம்.
உண்மையில் அமங்கலச் சொற்கள் சொல்லும்போது, அது அமங்கலமாகவே உட்கார்ந்துகொண்டு இம்சை பண்ணும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

♥வீட்டில் உள்ள தரித்திரத்தின் அறிகுறிகள் என்று சிலவற்றைச் சொல்லுகிறார்கள்.

♥வீட்டில் உள்ள ஸிங்க்கில், கழுவப்படாத எச்சில் பாத்திரங்கள் நீண்டநேரமாக அப்படியே இருந்தால், அது தரித்திரத்தின் அறிகுறி. எனவே அப்படி பாத்திரங்களை வைக்காமல், உடனுக்குடன் அலம்பிவிடுங்கள்.

♥ரேஷன் கார்டில் குடும்பத்தலைவன் என்று ஆணின் பெயர் இருந்தாலும், ஒரு வீட்டுக்கு அரசிதான் உண்டு. இல்லத்தரசிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது சாஸ்திரம். எனவே, பூஜையறையில், பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும்.

♥வீட்டில், எப்போதும் தலைமுடி தரையில் இருந்துகொண்டே இருப்பது நல்ல அறிகுறி அல்ல. முடி உதிராமல் இருக்கவும் வீட்டுக்குள் தலைவாராமல் இருக்கவும் காற்றில் வெளியிலிருந்து முடி உள்ளே வராமல் இருக்கவும் நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்.

♥ஒட்டடைகள், தரித்திரத்தின் மிக முக்கியமான அறிகுறி. ஒட்டடை அடித்துவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், அடுத்தடுத்த நாளில் ஒட்டடை வரத்தான் செய்யும். எனவே, ஒட்டடைகள் வரவர, உடனே அடித்து நீக்கிவிடுவது நல்லது. ஒட்டடையை நீக்குவதில், அலுத்துக்கொள்ளாதீர்கள்.

♥மாலை வேளையில், விளக்கேற்றிய பிறகு, வீட்டைப் பெருக்குவதும் துடைத்து மெழுகுவதும் கூடவே கூடாது. அதேபோல், எவ்வளவு அயர்ச்சியாக இருந்தாலும் மாலை வேளையில், தூங்கக் கூடாது.

♥வீட்டுக் குழாய்களில், தண்ணீர் சொட்டிக்கொண்டே இருப்பது நல்லதல்ல. எனவே குழாயை உடனடியாக சரிசெய்து கொள்ளவேண்டும்.
பால், அரிசி, உப்பு, சர்க்கரை முதலானவை முழுக்க காலியான பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்றிருக்கக் கூடாது. உப்பு, அரிசி, சர்க்கரை ஆகியவையெல்லாம் எப்போதும் வீட்டில் அந்தந்தப் பாத்திரங்களில் நிறைந்திருக்கவேண்டும்.

♥இல்லை, நடக்காது, முடியாது, நாசமாப் போச்சு, என்ன எழவுடா இது என்பது போன்ற அமங்கலச் சொற்களை சொல்லவே சொல்லாதீர்கள். அதுவும் குறிப்பாக, வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டோ, நடுஹாலில் இருந்துகொண்டோ சொல்லாதீர்கள். அந்தச் சொற்கள் உதிர்ந்து காற்றில் கலந்த அடுத்த நொடியே, மூதேவி நம் வீட்டுக்குள் குடிபுகுந்துகொள்வாளாம்!

♥ஐம்பது சதவிகிதம் நம் ஊதாரித்தனமான செலவுகளாலும் மீதமுள்ள ஐம்பது சதவிகிதம் இதுமாதிரியான விஷயங்களாலும் ஒரு வீட்டில் தரித்திரம் வந்து உட்கார்ந்துகொள்கிறது என்கிறது சாஸ்திரம். கவனமாக இருங்கள்

Post a Comment

0 Comments