HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தந்தைகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு எவ்வாறு உதவலாம்

♥தந்தைகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு எவ்வாறு உதவலாம்

♥தந்தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு நிறைய ஆதரவும், கவனிப்பும் தேவைப்படுகிறது. அந்த ஆதரவையும் கவனிப்பையும் அந்த தாய்மார்களின் அருகாமையில் நீங்கள் இருக்கும்போதுதான் கிடைக்கும். அவர்கள் பாலூட்டும்போது அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியின் போது தான் உங்கள் குழந்தைகள் பேசும் மொழியை உங்களால் உணர முடியும்.

♥தந்தைகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதற்கான சில வழிமுறைகள் இங்கே.

♥முதலில் பாலூட்டுதலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றின் தன்மைகள் என்ன,வழிமுறைகள் என்ன, அவற்றிற்கான சிக்கல்கள் என்ன என்பதற்கான உங்களது தேடல்களும்,அவற்றிற்கான பதில்களுமே அவளுக்கு பெரும் துணையாய் இருக்கும்.

♥இயல்பு வாழ்க்கையில் பாலூட்டுவது மிகவும் சவாலான விஷயங்களாகும். பாலூட்டும்போது அவளது உடலும், மனமும் சோர்வடையும். சாய்ந்துக் கொள்ள தலையணையைத் தருவது, தண்ணீர் அல்ல அவளுக்கு தேவைப்படும் உணவை கொடுப்பது, அவள் புன்னகைக்கக்கூடிய வார்த்தைகளைப் பேசுவது, வீட்டில் செல்லப் பிராணிகள் மற்றும் உறவினர்கள் அந்நேரத்தில் அவளிடம் வராத வகையில் ஒரு காவலாய் நிற்பது, போன்றவைகள் அவர்களுக்கு பெரும் உதவியாய் இருக்கும்

♥ஆரம்ப நாட்களில் தாய்ப்பால் கொடுப்பது முதல் முறையாய்த் தாய்மையடையும் பெண்களுக்கு கடினமாகவே இருக்கும். பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் ஒத்துழைக்காது. நீங்கள் அந்நேரத்தில் பொறுமையை இழக்காதீர்கள், தாயை ஊக்குவியுங்கள். நீங்கள் பக்கத்திலிருப்பீர்கள் என்று உறுதியைக் கொடுங்கள் . அந்த சிறந்த தாய்ப்பாலைத் தொடர அவளுக்கு நம்பிக்கை கொடுங்கள்.

♥குழந்தை பராமரிப்பில் உதவுங்கள் : தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும், பின்பும், உங்கள் குழந்தைகளின் டயப்பரை நிறைய முறை மாற்ற வேண்டியிருக்கும். அதை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். தாய்ப்பால் கொடுத்த பிறகு, உங்கள் குழந்தையை நீங்கள் கவனமாக பற்றிக் கொள்ளுங்கள்.

♥தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதை உணர்ந்தால் லேக்டேஷன் ஆலோசகரைத் (lactation consultant) தொடர்பு கொள்ளுங்கள். தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான உங்கள் கவலைகளைப் பகிர்வதற்கும், ஆலோசனைகள் கொடுப்பதற்கும் நீங்கள் உள்ளூர் அல்லது ஆன்லைனில் தாய்ப்பால் கொடுக்கும் குழுக்களில் உறுப்பினராக சேரலாம்.

♥ஆரம்ப மாதங்களில் புதிய தாய்மார்களுக்கு மிகவும் மன அழுத்தம் ஏற்படுத்தும். எனவே, அவளுக்கு போதுமான அன்பையும் பாசத்தையும் காட்ட மறக்காதீர்கள். அவள் உறவு கொள்ள விரும்பவில்லை என்றால் பொறுமையாய் இருங்கள்.

♥ஓரிரு மாதங்கள் கழிந்து, சேமித்து வாய்த்த தாய்ப்பாலை நீங்களே பாட்டிலுள் உங்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம்.

♥உங்கள் குழந்தையை உங்கள மார்போடு அணைக்கும் போதும் ஸ்லிங் கேரியர் போக்கில் தூக்கி சுமக்கும் போதும் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்குமான தொடர்பை நீங்கள் ஆழப்படுத்துவீர்கள்

Post a Comment

0 Comments