♥#மாற்றம்: ஒரு நிமிட கதை
♥அம்மா நான் ரமா பேசறேன். இப்போ எப்படி இருக்கா சித்ரா?
யாரு உன் தம்பி ரகு பெண்டாட்டி தானே? அதே மாதிரி தான் ஒரு மாற்றமும் இல்லை.
இப்பவும் எட்டு மணிக்குத்தான் எழுந்துக்கறாளா?
ஆமாம்... மகாராணிக்கு எட்டுக்கு மேலே தான் விழிப்பு வரும்.
♥ரகுவோட ராத்திரி சுத்திட்டு, ஒன்பது மணிக்கு வரான்னு குறைபட்டு கிட்டு இருந்தாயே? இப்ப எப்படி?
உம்... இப்போ பத்து மணிக்கு வராங்க. தூங்கத்தானே வீடுன்னு நினைப்பு.
♥இப்போ சமையல் பண்ண கூடமாட ஒத்தாசையா இருக்காளா?
சித்ராவுக்கு சமையல் கட்டு எங்கே இருக்குன்னே தெரியாதுன்னு நினைக்கறேன்.
சரிம்மா... அடுத்த வாரம் பேசறேன்...
♥அம்மா நான் ரமா. ஒரு வாரம் ஓடிப்போச்சி. நிலைமை அங்கே எப்படி? இப்பவும் சித்ரா எட்டு மணிக்குத்தான் விழிப்பா?
பாவம் தூங்கட்டும். சின்ன வயசுதானே.
♥அப்போ ராத்திரி லேட்டா வர்றதா சொன்னயே? இப்போ?
யாரோட போறா? ரகுவோடத்தானே. அவனுக்கும் கொஞ்சம் சேன்ஜ் வேணும் இல்லை...?
♥என்னம்மா சொல்லறே? சமையலுக்கு இப்போ ஹெல்ப் பண்ணறாளா?
ஆமாம் பெரிய சமையல், மூணு பேருக்கு சமைக்க எனக்கு தெரியாதா?
என்ன ஆச்சு... தலைகீழா பேசறே? சித்ரா எதிரே இருக்காளா?
உனக்கு விஷயம் தெரியாதா? ஒரு வாரமா அவள் வேலைக்கு போறா. இருபதாயிரம் சம்பளம்.
♥-வி.சிவாஜி
0 Comments
Thank you