HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அதுதான் அம்மா

♥அதுதான் அம்மா 

♥விக்னேஷ் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தான்.
செல் ஒலித்தது.
என்ன உமா?
எனக்கு காலையிலே இருந்து தலைவலிங்க லேசா ஃபீவரும் இருக்கு. சீக்கிரம் வந்தீங்கன்னா டாக்டர்கிட்டே போகலாம்.

என்ன உமா ஆபிஸ்லே ஆடிட்டிங் நடக்குது. நம்ம டாக்டர்தானே, நீ மட்டும் போய் வா.

♥ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் செல் ஒலித்தது. இம்முறை உமா அல்ல, அவன் அம்மா!

என்னடா விக்கி, நல்லா இருக்கியா! உமா எப்படி இருக்கா?

♥நல்லா இருக்கேம்மா, நீ எப்படிம்மா இருக்கே? அப்பா சரியா மருந்து சாப்பிடுறாரா?

ம்…சாப்பிடுறாரு…அது சரி, விக்கி என்னடா ஆச்சு உனக்கு? கரகரன்னு பேசறே, தொண்டை சரி இல்லையா?

ரெண்டு நாளைக்கு முன்னாடி மழையில நனைஞ்சிட்டேம்மா’ என்று அம்மாவுக்கு பதில் சொன்னவன், ‘திண்டிவனத்திலிருக்கும் என் அம்மாவுக்கு என் குரல் மாற்றம் தெரிகிறது. திருவான்மியூரிலிக்கும் என் மனைவிக்குத் தெரியலையே..! என்று எண்ணினான்!
- சு.மணிவண்ணன்

Post a Comment

0 Comments