HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு நிமிடக் கதை: அவரவர் கவலை!

♥ஒரு நிமிடக் கதை: அவரவர் கவலை!

♥''கலா.. கிளம்பறேன்" என தன் மனைவியிடம் கூறிவிட்டு கிளம்பினான் ராஜா.
"என்னங்க.. இன்னைக்காவது ஸ்கேன் எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்."

♥கர்ப்பிணியான மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், "கண்டிப்பா முதலாளிக்கிட்ட அட்வான்ஸ் கேட்கிறேன் கலா" என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
இரண்டு அடி எடுத்து வைத்தவன், திரும்பி தயங்கியபடி "கலா.. ஒரு நூறு ரூபாய் இருந்தால் கொடேன். செலவுக்கு கையில் பணமே இல்லை" என்றான்.

♥தனக்கு மாத்திரை வாங்க வைத்திருந்த பணத்தை கணவனிடம் கொடுத்தாள் கலா.
ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு கார் டிரைவர் உத்யோகம் ராஜாவுக்கு.

♥முதலாளியைக் காண வெளிநாட்டு நண்பர்கள் வந்ததால் அவர்களை சில இடங்களுக்கு காரில் அழைத்துச் சென்றார் முதலாளி. மதியம் முதலாளியும் அவரது நண்பர்களும் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டார்கள். ராஜாவுக்கு பசித்தது. ஆனால், அருகில் எதுவும் சாதாரண ஹோட்டல் இல்லை. சற்று தூரம் போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்றால், எப்போது வேண்டுமானாலும் முதலாளி கூப்பிடுவார். எனவே, பிற்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம் என ராஜா காத்திருந்தான்.

♥போன வேலை முடிந்து, அனைவரும் காரில் திரும்பும்போது மாலை ஆகிவிட்டது.
முதலாளி வண்டியை நிறுத்தி சிகரெட் வாங்கி வரச்சொல்லி ராஜாவிடம் சொன்னார். முதலாளி பர்ஸில் சில்லறையாக இல்லை.
"சில்லறை இல்லை ராஜா.. நீயே வாங்கிட்டு வா"ராஜாவிடம் காலையில் அவன் மனைவியிடம் வாங்கிய நூறு  ரூபாய் மட்டுமே. அதைக் கொடுத்து சிகரெட் வாங்கி வந்து கொடுக்க, முதலாளி தன் நண்பர்களுடன் புகைத்தபடி பேசிக் கொண்டிருக்க, ராஜா பசியோடு காத்திருந்தான்.

♥'இன்னிக்கு முதலாளிகிட்ட கேட்டு அட்வான்ஸ் வாங்கிட்டா, நாளைக்கே கூட ஸ்கேன் பண்ண கூட்டிட்டு போயிடலாம்' என்று மனதிற்குள் திட்டம் போட்டுக் கொண்டிருந்தான் ராஜா.
"ராஜா.. காரை எடு.." முதலாளியும் நண்பர்களும் வந்து காரில் உட்கார, கார் கிளம்பியது.

♥நண்பர்களை அவர்கள் இருந்த நட்சத்திர ஹோட்டலில் விட்டுவிட்டு, முதலாளியின் வீட்டுக்கு அவர்கள் திரும்பும்போது இரவாகிவிட்டது. முதலாளி களைத்துப் போயிருந்தார். ராஜாவும் தான்.
"நாளைக்கு காலைல பத்து மணிக்கு வந்துடுப்பா" என்று சொல்லிவிட்டு முதலாளி உள்ளே போக, ராஜா தயங்கி தயங்கி " சார்.. வந்து"

♥"என்னப்பா.. சொல்லு". அந்த ‘சொல்லு’-வில் ஏகப்பட்ட சலிப்பு தெரிந்தது.
"இல்ல.. சம்பளத்துல அட்வான்ஸ் பணமா ஒரு ரெண்டாயிரம் ரூபா குடுத்தீங்கன்னா..' வாக்கியத்தை முடிக்கும் முன் முதலாளி முறைத்தார்.

♥"எப்ப பாத்தாலும் இதே தொல்லையாப்போச்சு.. பணம் எல்லாம் இல்லை.. நாளைக்கு காலைல நேரத்துக்கு வந்துடு.. நிலைமை புரியாம. அட்வான்ஸாம்.. ஃபிரெண்ட்ஸ்கிட்ட  நான் கேட்டிருக்க 1 கோடி ரூபா கடன் நாளைக்காவது கிடைக்குமான்னு தெரியாம குழம்பிட்டிருக்கேன்.. இவன் வேற.." என்று சலித்துக் கொண்டே உள்ளே போனார் முதலாளி.

♥கையில் இருந்த நூறு ரூபாயும் முதலாளிக்கு சிகரெட் வாங்க செலவழிந்துவிட்டதால் பாக்கெட்டும், வயிறும் காலி.
பசித்தது. வீட்டுக்குப் போய் கலாவிடம் என்னவென்று சொல்வது என்ற மன உளைச்சலுடன் நடக்க ஆரம்பித்தான் ராஜா.

Post a Comment

0 Comments