HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

காதலுக்கு மரியாதை

♥காதலுக்கு மரியாதை!

♥தன்னுடைய மாருதி ஸென் காரை நிறுத்தி விட்டு, வீட்டிற்குள் நுழைந்த உமா, அப்பா சேஷனும், அம்மா கமலாவும், கடுமையான முகத்துடன், அவளைப் பார்ப்பதை உணர்ந்தாள். அந்தக் குரோதமான பார்வையை, சிறிதும் சட்டை செய்யாமல், ஹாலை கடந்து, மாடிப்படிகளில் ஏற முற்பட்ட போது, அம்மா, கமலாவின் உரத்த குரல், அவளை தடுத்து நிறுத்தியது.
''உமா நில்லு.''
ஒரு வினாடி தயங்கினாலும், பின் லட்சியம் செய்யாமல், தொடர்ந்து படிகளில் ஏறலானாள்.

♥''என்னடி... நில்லுன்னா நிக்க மாட்டியா நீ?''
உமா அலுப்புடன் நின்று, அங்கிருந்தே அம்மாவை பார்த்து, ''என்ன?'' என்றாள்.
''நீ, உன் முடிவ மாத்திக்கப் போறீயா, இல்லையா?''
''எந்த முடிவக் கேக்கறீங்க... கோவில்ல கல்யாணமா இல்லை ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணமா என்கிறதையா?'' என்றாள், நக்கலாக.
கமலாவின் முகம் சிவந்தது. '' சீ... இப்படி பேச வெட்கமாயில்ல... பெத்தவங்க நாங்க குத்துக்கல்லு மாதிரி இருக்குறோமே... உனக்கு ஏத்த மாப்பிள்ளையைப் பார்த்து, கல்யாணம் செய்து வைக்க எங்களுக்கு தெரியாதா... ஏதோ ஊர், பேர் தெரியாத உதவாக்கரையை நீயாக தேடிக் கொண்டு, என்ன சொன்னாலும் கேட்காமல், அவனைத் தான் கட்டுவேன்னு அடம் பிடிக்கற,'' என்று, கூச்சல் போட்டாள்.

♥அம்மா கத்தியதை சட்டை செய்யாமல், நின்ற இடத்திலிருந்தே பேசினாள்...
''அப்ப, நீங்க தேடிப் பிடிச்சு கொண்டு வர்ற, ஊர், பேர் தெரிந்த உதவாக்கரைய தான், நான் கல்யாணம் செய்துக்கணுமாக்கும்?''
''உமா, இப்படியெல்லாம் பேச, உனக்கு யார் தைரியம் கொடுத்தது... அந்த அயோக்கியப் பயலா?'' என்றார் கோபத்துடன் அப்பா சேஷன்.

♥புன்னகை செய்தாள் உமா.
''என்னப்பா... இந்த இருபத்து ஐந்து வயது வரைக்கும், நீங்க எனக்கு தைரியம்
கொடுத்து வளர்த்துட்டு, இப்போது இப்படி கேள்வி கேக்கறீங்க... அந்த ரிஷிய எனக்கு மூன்று வருஷமாத் தானே தெரியும். அவன் எப்படி, எனக்கு புதுசா தைரியம் கொடுத்திருப்பான்,'' என்றாள்.
''சட்... எதற்கெடுத்தாலும் எதுத்து எதுத்து பேசத் தெரியுது. ஆனா, எது நல்லது, கெட்டதுன்னு பிரிச்சுப் பாக்கத் தெரியலியே உனக்கு...'' என்றார் சேஷன்.
மாடியிலிருந்து இறங்கி வந்து, அவர்களுக்கு முன், நேராக நின்றாள் உமா.

♥''இதோ பாருங்க அப்பா... நீங்க என்ன சொன்னாலும், நான் அந்த ரிஷியத் தான் கல்யாணம் செய்துக்கப் போறேன். அவன்கிட்ட என்ன குறைன்னு எனக்கு தெரியல. அவன் நம்ப அளவு பணக்காரனில்ல, நம்ம ஜாதியில்ல என்கிறத தவிர, வேற குத்தமும் உங்களால் கண்டுபிடிக்க முடியல. அவங்க வீட்டில எங்க காதலுக்கு எதிர்ப்பு இல்ல. நானும் உங்ககிட்ட, என் காதலப் பத்தி சொல்லி, ரிஷியக் கூட்டி வந்து, பேச வச்சு, எல்லாத்தையும் சொல்லியும் கூட, நீங்க திரும்ப திரும்ப, ஒரே புள்ளியில் நிக்கறீங்க.
''உங்க சம்மதம் வேணும்கறதுதான் என் ஆசை. அதே சமயம், நீங்க, வலுவான காரணம் எதுவுமில்லாம, சில்லியா இந்த கல்யாணத்த தடுத்து, உங்க இஷ்டத்துக்குதான், நான் நடக்கணும்ன்னு நினைச்சிங்கன்னா அது வீண். எங்க கல்யாணம், உங்க விருப்பமும், சம்மதமும் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நாங்க சொன்ன நாளில் நடக்கும். அவ்வளவுதான்,'' என்று நிறுத்தி, நிதானமாகச் சொல்லிவிட்டு, திரும்ப மாடி ஏறத் துவங்கினாள் உமா.
''உமா... நீ, எங்கள கஷ்டப்படுத்திட்டு சந்தோஷமா, கல்யாணம் செய்துக்க முடியாது; எங்க பொணத்து மேலதான், நீ தாலி கட்டிக்கணும் ஞாபகம் வச்சுக்க,'' என்று, கத்தினாள் கமலா.
'
♥'ஐயோ... அம்மா நிறுத்து; இந்த டயலாக்க எத்தனையோ சினிமாவில கேட்டாச்சு. புதுசா ஏதாவது பேசும்மா,'' என்று அலட்சியமாகக் கூறிவிட்டு, தன் அறைக்குள் சென்று விட்டாள் உமா.
ஆனால், மறுநாள் அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
மறுநாள் காலை, தூங்கி எழுந்து, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, அவள் பெற்றோர் வழக்கம் போல், ஹாலில் இல்லை. ஹாலை ஒட்டியிருந்த, அவர்களின் படுக்கையறை கதவு லேசாகத் திறந்திருந்தது. நாளிதழ் எடுக்கப்படாமல், வாசல் கதவு இடுக்கு வழியே உள்ளே வந்து கிடந்தது.

♥சற்றே துணுக்குற்ற வளாகத தன் பெற்றோரின் அறைக்கு அருகே சென்று, லேசாகத் திறந்திருந்த கதவை முழுசாகத் திறந்தாள்.
அங்கே அவள் கண்ட காட்சி, அவளைத் திடுக்கிட செய்தது.
சேஷனும், கமலாவும் இன்னும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்காதவர்களாக இருந்தனர்.
வேகமாக அருகே சென்று, ''அம்மா... அம்மா...'' என்று தலையை உலுக்கினாள்.
பதிலில்லை; பதட்டம் அடைந்தவளாகத் தந்தையிடம் சென்று, ''அப்பா... அப்பா...'' என்று அசைத்தாள்; அங்கும் பதிலில்லை. அடி வயிறு சில்லிட்டவளாகச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அருகே, மேஜை மீது, ஒரு பேப்பரும், அதன் மேல் ஒரு பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது.

♥''ஓ...மை காட்...'' என்று கத்தியவாறு, அந்த பாட்டிலை எடுத்துப் பார்த்தாள். அது அவள் தந்தைக்கு ரத்த அழுத்தத்திற்காகக் கொடுக்கப்பட்டிருந்த தூக்க மாத்திரை, பாட்டில்... காலியாக இருந்தது. வேகமாக, அந்தக் காகிதத்தை எடுத்தாள்.
'எங்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்கும், என் மகளுடன் வாழ, இனி எங்களுக்கு விருப்பமில்லை. எங்கள் சாவுக்கு நாங்களே காரணம். இப்படிக்கு - சேஷன் கமலா.'
''ஐயோ... மை காட்...'' என்று அலறிய உமா, உடனே ஓடிச் சென்று, தந்தையின் மொபைலை எடுத்து, அவர்களின் குடும்ப டாக்டர் பாஸ்கருக்குப் போன் செய்தாள். எதிர்த்திசையில், போனை எடுக்கச் சற்று நேரம் ஆனபோது, உமாவின் மனம் பதைபதைத்தது. கடைசியில் போனை எடுத்த டாக்டர் பாஸ்கர், ''ஹலோ... குட்மானிங் சேஷன்,'' என்று, முடிப்பதற்குள், ''டாக்டர் அங்கிள்... அப்பாவும் - அம்மாவும் தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டாங்க போல இருக்கு, உடனே வாங்க,'' என்றாள் அழும்

♥குரலில்.
''ஐயோ... என்ன உமா சொல்ற...''என்றவர், ''உடனே ஆம்புலன்ஸ் அனுப்புகிறேன்,'' என்று, கூறி, போனைத் துண்டித்தார். பதைபதைக்கும் மனதுடன் உமா, தந்தையின் மூக்கருகே விரலை வைத்துப் பார்த்தாள். மூச்சு வருவது போலவும், இல்லாமலும் இருப்பது போலவும் தோன்றியது. கமலாவின் நிலையும் அப்படியே. தந்தையின் மொபைலுடன் குறுக்கும், நெடுக்குமாக பதட்டத்துடன் நடந்து கொண்டிருக்கும் போது, ஆம்புலன்ஸ் வரும் ஒலி பலமாகக் கேட்டது.
ஓடிச்சென்று கதவைத் திறக்கவும், ஆம்புலன்சிலிருந்து இறங்கி வந்த நான்கு ஆட்கள், சேஷனையும், கமலாவையும் தூக்கி ஆம்புலன்சில் ஏற்றினர். உமாவும் ஏறியவுடன் ஆம்புலன்ஸ் மருத்துவமனையின், 'எமர்ஜென்சி வார்டை' நோக்கிப் பறந்தது.

♥''நல்ல வேளை... நீ சரியான நேரத்தில தான் பாத்திருக்க, 'கம்ப்ளீட் ஸ்டமக் வாஷ்' செய்தாச்சு. ரெண்டு பேரும் ஆபத்தான நிலையத் தாண்டிட்டாங்க. எக்ஸஸ் தூக்க மாத்திரைதான்,'' என்றார் டாக்டர்.
டாக்டர் சொன்னதைக் கேட்டு, கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட உமா, ''இப்ப நான் அவங்கள பாக்கலாமா?'' என்று கேட்டாள்.
''ஓ...'' என்று சொன்ன டாக்டர், அப்போதுதான் உமாவுக்கு சற்று தள்ளி நின்றிருந்த, இளைஞனைக் கவனித்தார். அந்த இளைஞனே டாக்டர் அருகில் வந்து, ''டாக்டர்... ஐ'ம் ரிஷி... உமாவின் பாய்பிரண்ட்,'' என்றான்.

♥டாக்டர் பாஸ்கர், அவனை உற்றுப் பார்த்தவர்.''இந்தப் பிரச்னைக்குக் காரணமே நீதான் போலிருக்கிறதே,'' என்றார்.
பாஸ்கர், குடும்ப டாக்டர் மற்றும் நண்பர் என்பதால், சேஷன், பிரச்னையை முன்னமே, பாஸ்கருக்குத் தெரிவித்திருந்தார். உமா, ரிஷியைப் பற்றி டாக்டரிடம் கூறிவிட்டு, அம்மா, அப்பாவை பார்க்க, ஐ.சி.யூ.,வில் நுழைந்தாள்.
டாக்டர் ரிஷியிடம், ''உன் முகம் தெரிந்த முகமாக இருக்கிறதே,'' என்றார்.
''அம்மா இங்க தான் நர்சா இருக்காங்க, தேவகின்னு பேரு,'' என்றான்.
''ஓ... நீ தேவகி பையனா... ஐ.டி.,ல வேல செய்யறதா சொன்னது...''
'' அது நான் தான் சார்.''

♥பாஸ்கர், ஒரு வினாடி யோசித்தவர், பின், ஏதோ நினைத்துக் கொண்டவர் போல், ''என்னோட உள்ளே வா,'' என்று, தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
ஐ.சி.யு.வில் கண்விழித்துப் படுத்திருந்த சேஷனும், கமலாவும் உமா கண்களில் கண்ணீருடன் உள்ளே போனதும், குரோதமாக பார்த்தார்.
''எதற்காக எங்கள காப்பாத்தின... உன் முகத்தப் பாக்கவே, எங்களுக்கு வெறுப்பாக இருக்கு,'' என்றாள் கமலா.
உமா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், திகைத்து நின்றாள்.
பின், ''சரிம்மா... நான் ரிஷியக் கல்யாணம் செய்துக்கல. நீங்க உசிரோட இருந்தா போதும்,'' என்றாள்.

♥கமலாவும், சேஷனும் பரிமாறிக் கொண்ட பார்வையில், வெற்றி தெரிந்தது.
இந்நிகழ்ச்சி நடந்த பத்தாவது நாள், மதிய நேரம், சேஷன், கமலா தம்பதியினர் பகோடா தின்று, காபியைச் பருகிக் கொண்டிருந்த போது, அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்த சேஷனிடம், கூரியர் பையன், ஒரு கவரைக் கொடுத்து, கையெழுத்து வாங்கி, சென்றான்.
முகத்தில், வினாக்குறியுடன் உள்ளே வந்து, கவரைப் பிரித்து, அதிலிருந்த, கடிதத்தை எடுக்கையில், ஒரு போட்டோ நழுவி விழுந்தது.
கமலா, அதைக் குனிந்து எடுத்தாள். அதில் மணக்கோலத்தில் ரிஷியும், உமாவும். அவர்கள் அருகில், புன்னகையுடன் டாக்டர் பாஸ்கர் நின்றிருந்தார்.

♥''அடிப்பாவி,'' என்று உரத்த குரலில் கூவிய கமலா, ''என்னங்க, இது அக்கிரமம்... அந்தக் கடிதாசில என்ன எழுதியிருக்கு சீக்கிரம் படிங்க,'' என்று, கத்தினாள்.
'அன்பே இல்லாத அப்பா அம்மாவுக்கு, நீங்கள் பாஸ்கர் டாக்டரிடம் ஐடியா கேட்டு, சும்மா எக்ஸ்ட்ராவா, ஒரு தூக்க மாத்திரை சாப்பிட்டு, என்னை பயமுறுத்தியதை, நீங்கள் மருத்துவமனையில் இருந்தபோது நானே ஊகித்து விட்டேன். ஏனெனில், நான் டாக்டருக்கு போன் செய்த போது, உங்கள் மொபைலில், நீங்கள் முதல் நாள் இரவு, கடைசியாக டாக்டர் பாஸ்கரிடம் பேசியிருப்பது தெரிந்தது.

♥'அப்போதே, எனக்கு இதில் ஏதோ சூது இருப்பதாகத் தோன்றியது. உங்களுக்கு நினைவு திரும்பிய பின், பாஸ்கர் அங்கிளைப் பார்த்து, உண்மையைத் தெரிந்து கொள்ளச் சென்ற எனக்கு, வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது.
'ரிஷியின் அம்மா தேவகி, பாஸ்கர் அங்கிள் ஆஸ்பத்திரியில் பல வருடங்களாக நர்சாக வேலை செய்பவர். அதனால், சும்மா, ஒரு எக்ஸ்ட்ரா மாத்திரை போட்டுக் கொண்டு, உயிர் ஊசலாடுவது போல் நடிப்பது குறித்து, நீங்கள் டாக்டரிடம், 'ஐடியா' கேட்ட விஷயத்தை, என்னிடமும், ரிஷியிடமும் சொல்லிவிட்டார்.

♥'உங்கள் பிடிவாதம் சரியல்ல; நீங்கள் ரிஷியை நிராகரிப்பதில், எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்த, டாக்டரும், இந்த தற்கொலை நாடகததிற்கு உடந்தையாக இருந்ததற்கு பிராயசித்தமாக, எங்கள் கல்யாணத்தை அவரே நடத்தி வைத்து
விட்டார்.

♥'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று
நினைக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். நீங்கள் எங்கள் காதலுக்கு மரியாதை தரக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் பிடிவாதமும், வறட்டு கவுரவமும், உங்கள் மகளின் ஆசையை விடவும், உங்களுக்கு உயர்வாக இருந்தது. அதற்காக என்னை கேவலமான முறையில் பயமுறுத்தவும் துணிந்திருக்கிறீர்கள்.
'இப்பவும், எங்களுக்கு உங்கள் மீது கோபமில்லை; வருத்தம்தான். உங்கள் மனம் மாறும் நாளில், எங்கள் வீட்டின் கதவுகள் என்றும், உங்களுக்காக திறந்திருக்கும்.
உங்கள் மகள்
உமா...'
கடிதத்தைப் படித்து முடித்த இருவரும், பேச்சற்று, சிலையாக நின்றனர்.

தேவவிரதன்

Post a Comment

0 Comments