♥கூட்டுக் குடும்பம்!
♥முத்தம் பொழியும் தாய்தந்தை
முதிர்ந்த தாத்தா பாட்டியுடன்
அத்தை மாமா பெரியப்பா
அன்பாய்ப் பழகும் சித்தப்பா
♥சித்தியோடு பெரியம்மா
சின்னப்பா என் தம்பி
அத்தனை பேருடன் நான் சேர்ந்து
அழகாய் வாழும் என் வீடு,
♥குருவிக்கூட்டம் ஒன்றாகக்
கூடி வாழும் சிறு கூடு!
பெருகிடும் இன்பத் தேன்கூடு
பேதம் இல்லா பெரும் வீடு!
♥ கூட்டுக் குடும்பமோர் பூக்காடு
கூடி வாழ்வோம் மகிழ்வோடு!
ஈட்டும் மிகுந்த அன்போடு
இன்பம் காண்போம் நிறைவோடு!
♥ பறவை கூட இனத்தோடு
பாசமாய்க் கூடி வாழ்ந்திடுது
உறவு முறையே தெரியாமல்
உலகில் வாழ்வதில் பயனேது?
♥ தனிமரம் என்றும் தோப்பில்லை
தனித்து வாழ்வதில் சிறப்பில்லை!
மனித உறவுகள் மேம்படவே
மகிழ்வாய்க் கூடி வாழ்வோமே!
♥ கடலூர் நா. இராதாகிருட்டிணன்
0 Comments
Thank you