கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன்?
நம் முன்னோர்கள், காலம் காலமாக கடைபிடித்து வந்த சடங்கு முறைகளில், வளைகாப்பும் ஒன்று.
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு ஏன் நடத்துகிறார்கள் ? நம் முன்னோர்கள் கடைபிடித்த அனைத்து நடைமுறைகளிலும் கண்டிப்பாக அறிவியல் பலன் இருக்கும். அந்த வகையில், வளைகாப்பு சடங்கு முறையில் அறிவியல் பயன் மறைந்திருக்கிறது.
ஒரு பெண் கர்ப்பம் தரித்த, 8 அல்லது 9வது மாதங்களில், வளைகாப்பு நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அப்போது, வயிற்றிலும் இருக்கும் சிசு, முழு வளர்ச்சி அடைந்திருக்கும்.தற்போது, இஸ்ரேல் போன்ற நாடுகளில் வயிற்றிலிருக்கும் குழந்தையின் அறிவுத்திறன் வளர்ச்சிக்காக ஒரு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதாவது கர்ப்பம் தரித்த, 8 அல்லது 9 மாதமான பெண்களின் வயிற்றுப் பகுதியில்,டால்பின் கொண்டு ஒலி எழுப்புகிறார்கள். 'கர்ப்பத்தில் முழு வளர்ச்சியை எட்டியிருக்கும் குழந்தைக்கு, டால்பின் எழுப்பும் ஒலியானது மூளை நரம்புகளை தூண்டும் திறன் படைத்தது. டால்பின் எழுப்பும் அந்த ஒலியின் அலைவரிசையானது, குழந்தையின் மூளை நரம்பை தூண்டும்' என இஸ்ரேல் மக்கள் கூறுகின்றனர்.
இது, மருத்துவ ரீதியாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகை சகிச்சை முறையை, 'டால்பின் பிசியோதெரபி' என, அழைக்கின்றனர். இதற்கும், நம் வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? மீனவர்கள் மற்றும் டால்பின் ஒலியை கேட்டவர்கள், இதை அறிந்திருக்க வாய்ப்புண்டு. டால்பின் எழுப்பும் ஒலியும், நம் கண்ணாடி வளையல் எழுப்பும் ஒலியும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது இவை இரண்டும், ஒரே அளவு அதிர்வை ஏற்படுத்தக்கூடியவை.
வளைகாப்பு நடத்தும் காலங்களில் அணியப்படும் கண்ணாடி வளையல்கள் ஏற்படுத்தும் ஒலியானது, வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. இதனால் பிறக்கும் குழந்தையின் அறிவுத்திறன் வளர்கிறது.
இன்று, பல்வேறு ஆராய்ச்சி, அறிவியல் உபகரணங்களை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் கண்டறியும் விசயங்களை, நம் முன்னோர்கள் எந்த உபகரணமும் இல்லாமல், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து, அவற்றை நாம் பயன்படுத்தும் வகையில் சடங்குகள் என்ற பெயரில் நம்மை செய்ய வைத்துள்ளனர்.
0 Comments
Thank you