"மருமகள்"
நேற்று மருமகளாய்
புத்தகம் போந்தவள்
மீண்டும் மகளாய்
தாய் வீடு வருவது
இன்று போய்
நாளை வா
என்பதானது அல்ல.
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது
ஆயிரம் காலத்துப்பயிர்
முப்பது நாளில்
வதங்கிப் போகிறது
நிச்சயமும்
நிச்சயதார்த்தமும்
முகூர்த்தமும்
சத்தியமாய்
சொற்கத்தில்
நிச்சயிப்பதில்லை.
பெண் என்றப் பண்டத்தை
ஆணுக்காக
அதிக விலை
கொடுத்து
வாங்கியே
ஆகவேண்டும்
0 Comments
Thank you