♥பெண்மை என்பது....
♥அன்றாடம் கூலி
வேலை செய்து
ஆகாரம் அளிக்கும்
பெண்ணவள்...
♥பாத்திரங்கள் தேய்த்தும்
வீட்டு வேலை பார்த்தும்
பருவம் எய்திய மகளை
காத்திரமாய் காக்கும்
பெண்ணவள்....
♥சன நெரிசலுக்கு மத்தியிலும்
சங்கடமின்றி மிட்டாய் கடலை
ஊசி சீப்பு விற்று
குடும்ப சுமை குறைக்கும்
பெண்ணவள்...
♥தெருவோரம் சிற்றுண்டி
பழக்கடை வைத்து
பள்ளியின் நிழல்
பிள்ளையில் விழ வைக்கும்
பெண்ணவள்....
♥கருவறை எடை
தளர்ந்த பின்னும்
மழலையை உடலோடு
உடையாய் சுமந்து
ஓய்வின்றி உழைத்து
விழுதுகளை தாங்கும்
வேரான பெண்ணவள்....
♥சிகரங்கள் தொட
சிதை தேய உழைத்து
தன் மகவை செதுக்க
தேயும் உளியான
பெண்ணவள்....
♥பெண்
எல்லைகளை கடந்தவள்
வரையறைகளுக்குள்
அடக்கிட முடியாதவள்
பூமியுள் ஆழப்புதைந்த
ஆணிவேர் இவள்....
♥பெண்மையென்றால்
மென்மை மட்டுமல்ல.
இதுவும் தான்.
♥-சங்கரி-சிவகணேசன் - சுவீட்சர்லாந்
0 Comments
Thank you