♥முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் என்ன?
♥முத்துபிள்ளை கர்ப்பம் என்றால் கர்ப்பபையில் கருவே உண்டாகி இருக்காது. ஆனால் கர்ப்பபையில் உள்ள நீர்கட்டிகளானது ஒன்றோடொன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருக்கும். இதுவே ‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம் எனப்படுகிறது. இது ஒரு குழந்தையாக உருமாற முடியாது. இந்த நீர்கட்டிகளினால் பெண்களுக்கு உதிர போக்கு ஏற்படும். இதனை ஸ்கேன் மூலமாக கண்டுபிடித்து மருந்து மாத்திரைகள் மூலம் சுத்தம் செய்துவிடுவார்கள்.
♥பெலோப்பியன் குழாய் (Fellopian Tube) கர்ப்பம் என்றால் என்ன?
♥கருவானது உருவாகும்போது ஒரு முழு ‘செல்’லாக இருக்கும்.
கருவானது வளர்ந்து மெல்ல மெல்ல நகரும். ஆரோக்கியமான் கர்ப்பமானது ஃபெலோப்பியன் குழாய் வழியாக நகர்ந்து கர்ப்பபையை அடையும். கர்ப்பபையில் அந்த கருவானது குழந்தையாக வளரும். ஆனால் பெலோப்பியன் குழாய் கர்ப்பம் என்பது கருவானது பெலோப்பியன் குழாய் வழியாக நகரும்போது சரியாக நகர முடியாமல் பெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இது தான் பெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ எனப்படுகிறது. பெலோப்பியன் குழாயில் குழந்தையால் வளர முடியாது.

♥எதனால் பெலோப்பியன் குழாய் கர்ப்பம் ஏற்படுகிறது?
♥பெலோப்பியன் குழாயில் எதாவது நோய் தொற்று இருந்தால் தான் பெலோப்பியன் குழாய் கர்ப்பம் உண்டாகிறது. ஆரோக்கியமான கர்ப்பத்தில் கருவானது தானாக நகராது. பெலோப்பியன் குழாய்களில் உள்ள நீட்சிகள் சுருங்கி விரிவதால் தான் கருவானது கர்ப்பப்பையை நோக்கி நகர்த்தப்படுகிறது. இந்த பெலோப்பியன் குழாயில் ஏதேனும் நோய் இருந்தால் சேதமடையும். இவ்வாறு சேதமடைந்த பெலோப்பியன் குழாயால் சுருங்கி விரிய முடியாது. இப்படி சேதமடைந்த பெலோப்பியன் குழாயால் கருவின் இயற்கையான நகர்வானது நிச்சயம் தடங்கலுக்கு உள்ளாகும்.
♥பெலோப்பியன் குழாயில் கரு வளர்ந்தால் என்னவாகும்?
♥பெலோப்பியன் குழாயின் அளவானது ஒரு ஊசி நுழையும் அளவுதான். அந்த மெலிதான குழாயில் கருவானது தங்கி வளர ஆரம்பித்தால் என்னாவாகும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இவ்வாறு பெலோப்பியன் குழாயில் தங்கி வளரும் கருவினால் பெண்களுக்கு தாங்க முடியாத வயிற்றுவலியும், உதிர போக்கும் ஏற்படும். இது சில சமயம் உயிருக்கே ஆபத்தாகவும் முடியும். இதனால் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
0 Comments
Thank you