ஆயுள்முழுதும் நீயே...❤
❤உன்னோடு வாழ புதுஉலகம் வேண்டும்
அதில் சின்னதாய் ஓர் அழகிய குடிசைபோதும்
❤இருவருக்குமிடையில் புரிதல் இருக்கணும்
புரிதலினால் அழகிய காதல் அரங்கேறிடனும்
❤மஞ்சள்தாலி அதை என்மார்பு சுமக்கும்வரையில் கண்ணோடுகண் சண்டையிடாது தூரமாய் இருந்திடனும்
❤முத்துப்பந்தல் மேடையதில் மூத்தோர் வாழ்த்துரைக்க மூன்று முடிச்சிட்டு நெற்றித்திலகமிட வேண்டும்
❤மாற்றிய மாலையுடன் அம்மிமிதித்து அருந்ததி பார்த்து என்னவனின் வலக்கரம் பற்றி அக்கினி சாட்சியாய் வலம்வர வேண்டும்
❤ஆயிரம் தெய்வங்களிடம் அடம்பிடித்து அடைந்தவனை அன்றுதான் நிமிர்ந்து பார்க்க வேண்டும் என் அன்னை நீயடா என்று
❤மின்னல் வெட்டும் அவன் விழிகள் வில்தொடுக்கும் அவன் புருவங்கள்
நானிதழ் பதிக்க ஏங்கும் அவன் நெற்றி கட்டளையிடும் அவன் உதடுகள்
❤அத்தனையும் இரசித்திட வேண்டும் அந்த ஒரு கணத்தினிலே..! முடியுமா என்னால்..?
என்னதான் செய்வது அரங்கத்தையே ஆயிரம் கண்கள் நோக்கிக்கொண்டிருக்குமே...
❤காலம்முழுதும் காத்திருக்கத் துணிந்தவள் இன்னும் சிலநாளிகை காத்திருக்க மாட்டேனா ஆனாலும் மனம் கேட்கவில்லை கணத்திற்குக் கணம் கடைக்கண் அவன் கண்களையே தேடியது
❤ஆதவன் அயர்ந்துதூங்க ஆயத்தமானான் அயலவர்களும் அகன்று போயினர்
அடிமனம் படபடக்க ஆரம்பித்தது
அடுத்து நடக்கப்போவது என்னவென்று புரியாமல்
❤அத்தையவள் அன்னையானாள் அறிவுரைகள் பல சொன்னாள்
மச்சினிச்சியோ மாயங்கள் பல சொல்வான் மயங்கிடாதே என்றுரைத்தாள்
❤என்னவென்று சொல்வேன் ஒருகணம் என் அன்னைமுகம் காணத்துடித்தேன்
கண்கள் சற்றுக் கலங்கியது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்
❤கால்கொலுசு சத்தம்கேட்டு கட்டிலில் இருந்தவன் வாசல்க் கதவினை நிமிர்ந்து பார்த்தான்
சட்டெனத் தலைகுனிந்தேன் சலனமின்றி உள்ளேவா... என்றான்
❤தாழிட்டுத் திரும்பினேன் திடுக்கிடும்படி அருகில் நின்றான் கண்களை நோக்கியவாறே...!!
கண்ணோடு கண்பார்க்கத் துடித்தவள் அவன் கண்பார்வையாலே கைதானேன்
❤காரணம் புரியவில்லை வார்த்தைகளும் வரவில்லை
அணைத்தவாறு நடந்தான் அமரவைத்தான் மஞ்சமதில்
❤ஆறுதல்கள் பல சொன்னான் ஆயுள்முழுதும் நீயே... என்றான்
எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனையிலும் உன் மார்பில் உறங்கிட வரம்கொடு என்றேன்
❤வார்த்தைகள் வேண்டாம் வாழும் காலமெல்லாம் கூடவே துணையிரு என்றவன்...
நெற்றிமேல் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்...❤❤❤
♥கவிதாயினி சிந்துஜா - இலங்கை ✒
உலகத்தமிழ் மங்கையர் மலர்
0 Comments
Thank you