HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சமையல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை !!

♥சமையல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை !!
#சமையலில்_செய்யக்கூடாதவை !!
♥குழம்பு, பொரியல், அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை சேர்க்கக்கூடாது.
♥குலோப்ஜாமூன் பொரித்து எடுக்க நெய் மற்றும் எண்ணெய்யை நன்றாக காய விடக்கூடாது.
♥தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
♥ரசத்தை அதிகமாக கொதிக்க விடக்கூடாது.
♥பாலை காபிக்கு நன்றாக காய விடக்கூடாது.
♥பிரிட்ஜில் உருளைக்கிழங்கையும், வாழைப்பழத்தையும் வைக்கக்கூடாது.
♥காய்கறிகளை பொடியாக நறுக்கக்கூடாது.
♥மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
♥கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
♥தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பை அதிகமாக கொதிக்க விடக்கூடாது.
♥பெருங்காயத்தை தாளிக்கும்போது, எண்ணெய்யை நன்றாக காய விடக்கூடாது.
#சமையலில்_செய்ய_வேண்டியவை !!
♥வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
♥வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
♥ கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, கெட்டியான பாகாக இருக்க வேண்டும்.
♥குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவை ஊற விட வேண்டும்.
♥போளிக்கு மாவு, குறைந்தது ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
♥குருமாவை இறக்கும்போது, கரம் மசாலாவை சேர்த்து இறக்க வேண்டும்.
♥புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைத்து கொள்ள வேண்டும்.
♥பூரிக்கு மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

Post a Comment

0 Comments