♥மலரும் நினைவுகள்..!!
♥கேட்டில் ஏறி நின்றுகொண்டு அதை ஒற்றைக் காலால் திறந்தும், மூடியும் விளையாடிய கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥கொய்யா மரத்தில் ஏறி அணில், கிளி கடித்த பழங்களை சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥தமிழ் சினிமா பாடல் வரிகள் சிறு சிறு புத்தகங்களாய் கிடைக்கும். அதை வாங்கி போட்டி போட்டு படித்த சூப்பர் சிங்கர்கள் அல்லவா? நாம்.
♥பூவரச இலையில் பீப்பி செய்து இசை வாசித்த கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥தட்டான், முயல் பிடிக்க காடுகளில் அலைந்த கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥ஆசை ஆசையாக கடிதம் எழுதியதும், அதை பல காலம் பாதுகாப்பாகச் சேர்த்து வைத்திருந்ததும் நம் தலைமுறை தான்.
♥சிம்னி விளக்கு பயன்படுத்திய கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥ஊருக்குள் வரும் கரடி, குரங்குகளை பார்த்து முதலில் பயந்தாலும், பிறகு அதனை பின்தொடர்ந்து போக்கு காட்டிய கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥வைக்கோல் போர்களில் துள்ளிக்குதித்து பிறகு எரிச்சல் தாங்க முடியாமல் தள்ளாடிய கடைசி தலைமுறையும் நாம் தான்.
♥காலையில் அம்மா போடும் டீ-யை குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து ரசித்து குடித்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥படிக்கும் பள்ளி எத்தனை கிலோமீட்டர் இருந்தால் என்ன... தொலைவில் உள்ள பள்ளிக்கு நண்பர்களுடன் ஒன்றாக நடந்து சென்றவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥தாத்தா, பாட்டியுடன் நேரத்தை செலவிட்டவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥அன்றைய நாளில் ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவு அரைப்பார். அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥ஞாயிறன்று பார்த்த திரைப்படத்தை அடுத்த நாள் பள்ளிக்கு சென்று நண்பர்களுடன் விவாதித்து மகிழ்ந்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள செய்தித்தாளுக்காக காத்து கிடந்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥கடைகளுக்கு செல்லும்போது பெரும்பாலும் மஞ்சப்பைகளை உபயோகப்படுத்தியவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥வகுப்பறையில் காமிக் கதைகளை, பாடப் புத்தகங்களுக்குள் வைத்துப் படித்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥அப்பா, அம்மா சொல்ல சொல்ல கை வலிக்கக் கடிதம் எழுதியவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥நாடகத்தில் வரும் 'ஷக்கலக்க பூம்பூம்" பென்சில்தான் வேண்டும் என்று அடம்பிடித்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்..
♥பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் கடைகளுக்கு ஒன்றாகச் சென்று அதிலும் அம்மா, அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥அம்மா சுடும் பலகாரங்களை சாப்பிட கையில் தட்டுடன் காத்திருந்தவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥தாத்தா பாட்டிகளிடம் அதிகபட்சமாக கதை கேட்டவர்கள் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥80, 90களில் பிறந்த பலருக்கும் மஞ்சப்பை தான் பள்ளிக்கூட பையாக இருக்கும்.
♥ஐஸ் வண்டிகாரரிடம் பீர் பாட்டில், குவாட்டர் பாட்டில் கொடுத்து ஐஸ் வாங்கி சாப்பிட்ட கடைசி தலைமுறை 80, 90களில் பிறந்தவர்கள் தான்.
♥இதுமட்டுமல்ல இன்னும் மறக்க முடியாத சில நினைவுகளை கடந்து வந்தவர்கள் தான் 80, 90களில் பிறந்தவர்கள்.
♥தற்போது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒன்றாக ஒப்பிட்டு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
0 Comments
Thank you