HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கடைசியாக உங்கள் மனைவியுடன் எப்போது உட்கார்ந்து சந்தோஷமாக பேசினீர்கள் என்றால்...

♥கடைசியாக உங்கள் மனைவியுடன் எப்போது உட்கார்ந்து சந்தோஷமாக பேசினீர்கள்  என்றால்... வெகு சிலரால் மட்டுமே உடனே பதில் சொல்ல முடியும்... சிலர் சற்று  யோசித்து நினைவு கூறலாம்... பெரும்பாலோர் நினைவுகூறக்கூட முடியாத அளவுக்கு  அது ஞாபகத்தில் இருந்து மறைந்திருக்கும்...

♥வீட்டுக்கு வீடு  வாசப்படி என்பதுபோல.. எல்லா குடும்பங்களிலும் எதோ ஒரு பிரச்சினை  இருக்கத்தான் செய்கிறது... ஒருவேளை நீங்கள் முப்பத்துக்குட்பட்ட  தம்பதிகளாக இருப்பின்... ஒரு புணர்தல் உங்களை சமாதானப்படுத்திவிடும்...  ஒருவேளை நீங்கள் 50க்கும் மேற்பட்ட வயதினரெனில்  ஒரு நுகர்தலோ, ஒரு  பார்வையோ கூட உங்களை சமாதானப்படுத்திவிடும்...

♥நீங்கள் 30க்கும் 50க்கும் இடைப்பட்ட நடுத்தர வயதினரெனில்... தவிர்க்க முடியாத இடைவெளி நிரந்தரமாய் அமைந்திருக்கும்...
பேசிக்கொள்வதை குறைத்திருப்பீர்கள்.. அல்லது தவிர்த்திருப்பீர்கள்...  உங்கள் பேச்சுக்கள் 99%  பிரச்சனைகளை பற்றியதாக மட்டுமே இருக்கும்...  

♥பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட கட்டணம், பண்டிகைக்கான செலவுகள், உறவுமுறை விஷேஷ  செலவுகள், வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், வீட்டிற்கு தேவையான பொருட்கள்  வாங்குதல், அதற்கான முதலீடு, கடன், கடனை கட்டுதல், கூடவே அலுவலக அழுத்தம்  என நாற்புறமும் ஜன்னல் இல்லாத அறைக்குள் அடைக்கப்பட்ட அழுத்த மனநிலையில்  எப்போதுமே இருப்பீர்கள்... இந்த அசாதாரண சூழ்நிலையில்  கணவன்-மனைவிக்குள்  அன்பான பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை...  என்றாலும்....

♥இந்த அழுத்த மனநிலை காலம் முடிந்து 50 களில் இருக்கும்போது யோசித்துப்பார்த்தால்... "அய்யோ..  நாம் வாழவே இல்லையே.... ஓடிக்கொண்டே இருந்திருக்கிறோமே.... " என்ற  ஏமாற்றமும், கழிவிறக்கமும் வரும்... அப்போது உங்களை ஆதிக்கம் செலுத்த ஒரு  மருமகள் வந்திருப்பார்... உங்கள் சுதந்திரம் பறிபோயிருக்கும்... உங்கள்  உடம்பு ஒத்துழைக்காது.... உங்கள் மனம் ஒத்துழைத்தாலும்... சமூகம் அதை  அங்கீகரிக்காது..."கிழவனும் கெழவியும் இப்போதான் கொஞ்சிக்கிடுதுங்க.." என்று ஏளனம் செய்யும்...

♥எதை சாதிக்க ஓடினோம்?? கேள்விகள் தூங்க விடாது... யாருக்காக நீங்கள்  உங்கள் இளமையை, வாழ்வை தொலைத்தீர்களோ.. அவர்கள் உங்களை புறக்கணித்து,  நீங்கள் யாருக்காக ஓடினீர்களோ.. அதேபோல அவர்களும்  யாருக்காகவோ  ஓடிக்கொண்டிருப்பார்கள்....

♥உங்கள் விரல்கோர்த்து  கனவுகளுடன் வாழ்வை தொடங்கிய பெண்... காலம்  சப்பிப்போட்ட கரும்பு சக்கையாய் பொலிவிழந்து ,  கண்கள் குழிவிழுந்து  எச்சமாய் நடமாடிக்கொண்டிருப்பர்...
இப்படித்தான் வாழ வேண்டுமா?? இல்லை.... குறைந்தபட்ச மாற்றங்களையாவது முயற்சிக்கலாம்...

♥ சமையலறை என்பது 7 அடுக்கு பாதுகாப்பு கொண்ட எதிரியின் கோட்டை அல்ல....   நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கே செல்லுங்கள்.. கழுவாமல் விட்டிருக்கும்  ஓரிரு பாத்திரங்களை கழுவுங்கள்.. கூட்டோ பொறியாலோ செய்யும் போது  குறைந்தபட்சம் கரண்டியை வாங்கி கிளறுங்கள்...

♥விடுமுறை நாட்களிலோ, பண்டிகை நாட்களிலோ அவர்களுக்கு சமையலறையில் இருந்து ஒய்வு கொடுங்கள்.. அல்லது கூட மாட ஒத்தாசை செய்யுங்கள்..

♥வாரம் ஒருமுறை வேண்டாம்... மாதம் ஒருமுறையாவது "இன்னிக்கு சமைக்க  வேண்டாம்.. நாம வெளில போகலாம்... எங்க போகலாம்ன்னு நீ சொல்லு" என்று  விடுமுறையுடன் , முடிவெடுக்கும் வாய்ப்பையும் கொடுங்கள்...

♥குழந்தை பிறந்தபிறகு இயல்பாகவே பெண்களின் எடை கூடும்....
அந்த எடைகூடலை கேலி செய்யாமல்.. அந்த அழகை ரசிக்க பழகுங்கள்... அவர்களின் கர்ப்பகால சங்கடங்களை நினைவு கூருங்கள்...

♥அவ்வப்போது  அவர்களின் தாய் வீட்டு விசேஷங்களை, நலன்களை விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்..

♥எல்லா செலவுகளுக்கும் உங்களை எதிர்பார்த்தே ஆகவேண்டிய சூழ்நிலை  தவிர்த்து  முன்கூட்டியே அவர்களிடம் செலவுக்கான பணத்தை கொடுத்து  விடுங்கள்.... "கொடுத்துட்டேன்.. என் வேலை முடிந்தது" என்ற எண்ணம்  தவிர்த்து , இடை இடையே கையிருப்பு இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்..

♥ உங்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும், உறவுகளுக்காகவும் தங்கள் கேரியர்  மீது அவர்கள் செய்துகொண்ட சுயசமாதானத்தை போற்றி நினைவுகூருங்கள்..

♥உங்கள் வேலை முடிந்த உடன் தூங்க செல்லாமல், உங்கள் மனைவி சமையலறை  வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை அவருக்காக காத்திருந்து ஓரிரு  வார்த்தைகளாவது பேசியபின் தூங்கச்செல்லுங்கள்...

♥ உங்க ஒயிப்  ஒர்க் பண்றாங்களா.. என்று யாராவது கேட்டால்..."இல்லை... சும்மாதான்  இருக்கிறார்" என்று சொல்லாதீர்கள்... மாறாக...." குடும்ப நிர்வாகத்தை  அவர்தான் கவனிக்கிறார்" என்று சொல்லுங்கள்... இந்த அங்கீகாரமே பல  போராட்டங்களுக்கான காரணம்

♥ முடிந்தவரை "உனக்காக வாங்கினேன்...."  என்று எதையாவது பரிசளியுங்கள்.... அவர்கள்  கலர் சரியில்லை, நல்லாவே இல்லை  என்றாலும்  கண்டுகொள்ளாதீர்கள்.... ஏனென்றால்... அவர்களே வாங்கி வந்தாலும்  கூட  வீட்டிற்கு வந்த உடன் பிடிக்காமல் போவது பெண்கள் இயல்பு.... உங்கள்  அன்பும் கலந்திருப்பதால்... பார்க்கப்பார்க்க அது அவர்களுக்கு  பிடிக்கும்...

♥முக்கியமாக, எக்காரணம் கொண்டும் மனைவியிடமோ,  மனைவிக்கு முன்னாலோ வேறொரு பெண்ணை புகழ்ந்து பேசாதீர்கள்.. அது உங்கள்  உடன்பிறந்த சகோதரியாவாகவே இருந்தாலும்... ஒருவேளை உங்கள் மகளை புகழவேண்டி  வந்தால் "உன்னைப்போலவே.." என்று எக்ஸ்ட்ரா பிட்டிங் அவசியம்...

♥ஏதேனும் விசேஷ நிகழ்ச்சிக்கு செல்ல நேர்ந்தால்..."அன்னிக்கு அவங்க வீட்டு  கல்யாணத்துக்கு போனப்போ  நீ இந்த புடவை தான கட்டிட்டு வந்த..... வேற புடவை  கட்டிட்டு  வா.... அந்த மஞ்சள் புடவை உனக்கு நல்லா இருக்கும்.." என்பது  போன்ற ஆலோசனைகள் அவசியம்.... இது நீங்கள் உங்கள் மனைவியை ரசிக்கிறீர்கள்  என்பதை அவர்களுக்கு உணர்த்தும்...

♥"ஏன் ஒரு மாதிரி இருக்க....  தலை எல்லாம் கலைஞ்சிருக்கு,, ரொம்ப டயர்டா இருக்க...  உடம்பு சரி  இல்லையா.." என்பது போன்று விசாரியுங்கள்... இது உங்கள் மனைவி மீதான  அக்கறையை அவருக்கு உணர்த்தும்...

♥ இதை எல்லாம் தாண்டியதுதான் உடல் சார்ந்த தேவைகள்... முடிந்தவரை அதை ஈடு செய்ய முயற்சியுங்கள்...

♥அப்புறமென்ன.... வாழ்க்கை வசப்படும்...
திரும்பி பார்க்கையில் வாழ்ந்த  திருப்தி கிடைக்கும்...

Post a Comment

0 Comments