HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிப்பது குழந்தைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துமா?

♥தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிப்பது குழந்தைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துமா?
♥பெண்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்பது தாய்மையடையும் தருணம் ஆகும். அனைத்து பெண்களின் வாழ்க்கையுமே தாய்மை அடைந்ததற்கு பிறகு முற்றிலுமாக மாறிவிடும். குழந்தை பிறந்து அவர்களுக்கு பாலூட்டும் காலம் முடியும்வரை அம்மாக்கள் அவர்களின் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காபி அதிகமாக குடிப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கூறுவார்கள். இந்த சூழ்நிலையில் தாய்ப்பால் கொடுக்கும்போது காபி குடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் பாலூட்டும் காலத்தில் எவ்வளவு காபி குடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
♥#கர்ப்பகாலத்தில்காபி
♥கர்ப்ப காலத்தில் காபி குடிப்பதை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நிறுத்தி விடவோ பெண்கள் அறிவுறுத்தப்படுவார்கள். ஏனெனில் காபியில் இருக்கும் காஃபைன் தொப்புள்கொடியை கடந்து கருவில் இருக்கும் குழந்தை மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான். அதனால் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் காபி பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.
♥#பாலூட்டும்காலம்
கர்ப்பகாலம் முடிந்து குழந்தை பெற்றவுடன் பெண்கள் மீண்டும் காபி குடிக்க தொடங்கி விடுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் இந்த காலகட்டத்தில் அடிக்கடி அதிக சோர்வுக்கு உள்ளாவதுதான்.
♥#காஃபைன்
காஃபைன் என்பது காபி, டீ மற்றும் அனைத்து கோகோ தாவரங்களிலும் காணப்படும் ஒரு பொருளாகும். இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் உங்களை சுறுசுறுப்பாகவும், அதிக ஆற்றலுடனும் இருக்கும்படி செய்கிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது ஆனால் அதிகளவு காஃபைன் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
♥#பாலூட்டும்போது_காபி_குடிக்கலாமா? காஃபினுடைய பக்கவிளைவுகளால் பாலூட்டும் போது காபி குடிக்கலாமா? வேண்டாமா? என்று பெண்கள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் பாலூட்டும் காலத்தில் காபி குடிப்பது அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதுதான். மிதமான அளவில் நீங்கள் குடிக்கும் காபியில் இருக்கும் காஃபைன் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்லும்போது அது அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
♥#எவ்வளவு_குடிக்கலாம்?
மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 300 மிகி அளவிற்கு காஃபைன் எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு மேலும் குடிக்க வேண்டுமென்று ஆசை இருந்தால் காஃபைன் குறைவாக இருக்கும் வேறு பானங்களை குடிப்பது நல்லது.
♥#விளைவுகள்
டீ, காபி மட்டுமின்றி சோடா, சாக்லேட் போன்ற பொருட்களிலும் காஃபைன் உள்ளது. எனவே நீங்கள் எடுத்துக்கொள்ளும் காஃபைன் அளவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக காஃபைன் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் குழந்தைகள் சோர்வாக காணப்பட்டாலோ அல்லது பால் குடிக்க மறுத்தாலோ நீங்கள் காஃபைன் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Post a Comment

0 Comments