♥மனைவியை ஏமாற்றும் கணவன் - காரணம் என்ன?
♥திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த உறவு பரஸ்பரம் அன்பும், காதலும் நிறைந்த உறவாகும். இது சிலருக்கு நல்ல புரிதலுடன் நிரந்தர வாழ்வாகவும், சிலருக்கு பாதியிலேயே முடிவடைகிறது. சந்தேகம், தவறான உறவு, மன ஒற்றுமையின்மை மற்றும் கருத்து வேறுபாடு போன்ற பல காரணங்களுக்காக பிரிதல் ஏற்படுகிறது. இதற்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. இங்கு கணவன் மனைவியை ஏமாற்றுவதற்கான காரணங்களை பார்க்கலாம்.
♥1. வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியான பிரச்சனைகள் ஏற்படும் போது, அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பின் காரணமாக மன அமைதி குறைந்து நிம்மதி இழப்பார்கள். ஆண்களுக்கு பிரச்சனைகளை தீர்க்க முன் வராமல், தவிர்க்கவே நினைப்பார்கள். இது மனைவியுடனான நெருக்கத்தை குறைத்து, மற்றவர்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும். அது அவர்களுக்கு நிம்மதி தருவதாக இருந்தால், மனைவியை ஏமாற்றவும் செய்வார்கள்.
♥2. சிலருக்கு எதிலும் புதுமை காணும் எண்ணம் இருக்கும். அவர்களுக்கு திருமண வாழ்க்கை ஒரே மாதிரி செல்வது சலிப்பை ஏற்படுத்தும். இவர்கள் எளிதில் மற்ற பெண்களால் கவரப்பட்டுவிடுவார்கள்.
♥3. உடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இது சிலருக்கு மனைவியுடன் திருப்தியை ஏற்படுத்தும். ஆனால், சிலர் புது வகை இன்பங்களை சோதிக்க மற்றவர்களை தேடுவார்கள். இது தவறு என அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் உடலுறவில் சிறந்தவர்களாக இருப்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளவும் இது போல் செய்வார்கள்.
♥4. திருமணமான புதிதில் இருக்கும் அக்கறை, சிறிது காலத்திற்கு பிறகு குழந்தைகள், வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்தல் மற்றும் வேலைப்பளுவின் காரணாமாக அவர்கள் நடுவில் அன்பில் சிறிது இடைவெளி ஏற்பட்டிருக்கும். அந்த சமயத்தில் ஆண்கள், அதை கொடுக்கும் பெண்ணின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள்.
♥5. கணவர்கள் செய்யும் சிலவற்றை மனைவிகள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என நினைப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை மனைவிகள் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்யும் போது, அது அவர்களுக்கு இடையே நெருக்கம் குறைந்து, ஏமாற்ற செய்கிறது
0 Comments
Thank you