♥70-80களிலும், 90களிலும் பிறந்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள் என்றே கூறலாம்.
#அன்று... #இன்று...
♥அன்று.. யாரவது வெளிநாட்டுக்கு போனாலோஃவந்தாலோ உற்றார் உறவினரோடு விமான நிலையத்துக்கு போய் டாட்டா காட்டும் தலைமுறை..
இன்று.. வீட்டிற்கே உறவினர்கள் வந்தால் கூட அவர்களை பார்க்காமா தலையை குனிந்து மொபைல் நோண்டி கொண்டிருப்போம்...
<><><><><><><><><><><><>
♥அன்று.. ஒரு வயசு கூடனாலும் அண்ணன், அக்கான்னு கூப்பிட்ட கடைசி தலைமுறை...
இன்று... வயது வித்தியாசம் எல்லாம் பார்க்காம பெயரை சொல்லியே கூப்பிடும் தலைமுறை...
<><><><><><><><><><><><><><><>
♥அன்று.. அடுத்த வீட்டு கேபிளில் ஊக்கு போட்டு படம் பார்த்த தலைமுறை..
இன்று.. பார்க்க விரும்பும் படத்தை மொபைல் போன்களில் டவுன்லோடு செய்து இணையத்தில் பார்க்கும் தலைமுறை...
<><><><><><><><><><><><><><
♥அன்று... அடுப்பூதுன அம்மனிகளின் கடைசித் தலைமுறை..
இன்று.. கேஸ் அடுப்பில் லைட்டரை அடித்து கொண்டிருக்கும் தலைமுறை...
<><><><><><><><><><><><><><><><
♥அன்று.. வேப்பங்குச்சியில் ஆரம்பிச்சு, சாம்பல், கோபால் பல்பொடி, உப்பு வைத்து பல் துலக்கிய தலைமுறை..
இன்று.. கோல்கேட் பவுடர், பேஸ்ட், ஜெல் அப்புறம் மவுத் வாஷ் போன்றவை வைத்து பல் துலக்கும் தலைமுறை...
><><><><><><><><><><><><><><><
♥அன்று.. ஊர்த்திருவிழால வில்லுப்பாட்டும், திரையில ரெண்டு கருப்புரூவெள்ளை படங்களும் பார்த்த கடைசி தலைமுறை.
இன்று.. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியையும், டிரம்ஸ் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கும் தலைமுறை....
0 Comments
Thank you