HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சிற்றின்பமும் பேரின்பமும்!

*_சிற்றின்பமும் பேரின்பமும்!_*
_இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!_
_படைப்பினால் ஈர்க்கப்பட்டால் சிற்றின்பம்._
_படைத்தவரால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்._
_படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்._
_படைத்தவரை ஆராதித்தால் பேரின்பம்._
_படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்._
_படைப்புகளில் படைத்தவரைக் கண்டால் பேரின்பம்._
_என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்._
கடவுலால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்._
_நான்தான் என எண்ணினால் சிற்றின்பம்._
_நான் ஒன்றுமில்லை என எண்ணினால் பேரின்பம்._
_அமைதி, ஆனந்தம் இம்மையில் பெற்றால் சிற்றின்பம்._
_அமைதி ஆனந்தத்தை நித்திய ஜீவனுக்காக பெற்றால் பேரின்பம்._
_செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்._
_செய்வதெல்லாம் கடவுள் என்றால் பேரின்பம்._
_செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்._
_செய்வது கடவுள் என எண்ணினால் பேரின்பம்._
_புறப் பொருட்களில் நிகழ்வில் சுகம் பெறுவது சிற்றின்பம்._
_அகத்திலேயே ஆவிக்குரிய சுகம் பெறுவது பேரின்பம்._
_இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்._
_வேறு எதனையும் விரும்பாமல்,சுயத்தை வெறுப்பது பேரின்பம்._
_நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்._
_நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்._
_உடலோடு மனதை தொடர்பு படுத்துவது சிற்றின்பம்._
_உடலோடு மனதையும் கடவுளை இணைப்பது பேரின்பம்._
_இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்._
_துன்பத்தை இன்பமென சகிப்பது பேரின்பம்._
_எங்கோ இருக்கிறார் கடவுள் எனில் சிற்றின்பம்._
_என்னுள் இருக்கிறார் கடவுள் எனில் பேரின்பம்._
_பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்._
_மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்._
_பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்._
_பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது,அன்பே உருவானது பேரின்பம்._
_சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்._
_சர்வவல்லமையுள்ள கடவுள் கலப்பது பேரின்பம்._
_பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்._
_தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்._
_அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்._
_அளவற்றது, முடிவில்லாதது பேரின்பம்._
_அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்._
_அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்._
_அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்._
_ஆவிக்குரிய  அழகில் அகமகிழ்ந்தால் பேரின்பம்._
_பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்._
_பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்._
_முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்._
_முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்._
_இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்._
_கருணையுடையது, கிருபையுள்ளது பேரின்பம்._
_உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்._
_உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்._
_புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்._
_புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்._
_மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்._
_மனம் கடவுள் ஒடுங்கினால் பேரின்பம்._
_மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்._
_மரணத்தையும் வெல்வது பேரின்பம்._
_மனமாய் இருந்தால் சிற்றின்பம்._
_மனதைக் கடந்தால் பேரின்பம்._
கடவுளை வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்._
கடவுள் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்._
_பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்._
_மொத்தமாய் கண்டால் பேரின்பம்._
_அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்._
_அகங்காரம் துறந்தால் பேரின்பம்._
_தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்._
_அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்._
_ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்._
_ஆண் பெண்ணை சகோதரத்துவமாய் நோக்குவது பேரின்பம்._
_ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்._
கடவுளால் மட்டுமே தரப்படுவது பேரின்பம்._
_உலகைப் பற்றினால் சிற்றின்பம்._
கடவுளை பற்றினால் பேரின்பம்._
_பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்._
_தன் நலம் கொள்ளாதது பேரின்பம்._
_இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்._
_இன்பமான இன்பமே பேரின்பம்._
_அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்._
கடவுள் ஞானம் விரும்புவது பேரின்பம்_
_பெற்று மகிழ்வது சிற்றின்பம்._
_கொடுத்து மகிழ்வது பேரின்பம்._
_சக்தியை இழப்பது சிற்றின்பம்._
_பிறருக்காக சக்தியை கொடுப்பது பேரின்பம்._
_பற்றுக் கொள்வது சிற்றின்பம்._
_பற்றற்று இருப்பது பேரின்பம்._
_மாறுவது, தாவுவது சிற்றின்பம்._
_மாறாதது நிலைத்தது பேரின்பம்._
_நிலையற்றது சிற்றின்பம்._
_நிரந்தரமானது பேரின்பம்._
*_எழும்பிப் பிரகாசி_*
முருகன் தனபால்
செங்கல்பட்டு

Post a Comment

0 Comments