ஈகோவும் வைகோவும் ஒன்னு கூடவே இருந்தா நம்மள உருப்பட விடாது
முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமா கேட்குறாங்க அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமா னு கேக்குறாங்க
மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவையாம்
சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்
ரேஷன் கார்டு photo 15 வருஷத்துக்கு முன்ன நம்ம எப்படி இருந்தோம் னு காட்டுது ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருக்கோம் னு காட்டுது
வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும் வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல எங்களை அடிச்சிக்க முடியாது
உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகனும் -பழமொழி
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி
பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும் ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்
வாலிபங்கள் ஓடும், வயதாக கூடும் ஆனாலும் பிரச்சனை குறையாதது
நாம் அழுதால் நமக்கே பிடிக்காது நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது
மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் பொண்டாட்டிங்க திட்டியே கொல்லுவோம்
கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்"
இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..!!
இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..!!
வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான் வசதி இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்
என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும், நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாதான் இருப்போம்
யாரோ பெத்த புள்ளயை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க சோறு போடும் அந்த உயர்ந்த உள்ளம் தான் ஆண்
அதிர்ஷ்டம் ambassador ல ஏறி வந்தா பிரச்சனை Flight ஏறி வருது ச்சை
கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும் இல்ல முடி விழும் அவ்ளோதாங்க வாழ்க்கை
காந்தி நாட்டுக்காக பாடு பட்டார் நாம காந்தி நோட்டுக்காக பாடு படுறோம்
கவர்மெண்ட் Exam லட்சம் பேர் எழுதுறாங்க ஆனா லட்சம் கொடுக்குறவங்க தான் select ஆகுறாங்க
இந்த உலகத்துல நல்லவங்க கெட்டவங்கனு யாரும் இல்ல நமக்கு புடிச்சா நல்லவங்க புடிக்கலனா கெட்டவங்க
முட்டி மோதி வாழ்க்கையில முன்னேறலாம் னு பாத்தா ஒரே முட்டுல கீழே தள்ளிவிட்டுறாங்க
வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா பாத்து சிரிக்கணும் புரிதா
வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா பாத்து சிரிக்கணும் புரிதா
எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க
0 Comments
Thank you