♥கணவனின் இந்த செயல்கள் தான் மனைவியின் மனதை வலி உணர செய்கிறதாம்...
♥கணவன் - மனைவி உறவு என்பது ஒரு அஞ்சறைப் பெட்டி. அதில் அனைத்து ருசியும் சம அளவில் கலந்திருக்கும். அதில் எந்தவொரு ருசியையும் சமநிலையில் பேணிக்காக்க வேண்டியது கணவன் - மனைவியின் கடமை.
♥பொதுவாக கணவன் குடித்தால், புகைத்தால், வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் பெண்களுக்கு பிடிக்காது. அது அவர்கள் மனதை வெகுவாக பாதிக்கும் என்று நாம் அறிவோம். ஆனால், கணவர்கள் தினந்தோறும் செய்யும் விஷயங்களில் கூட சிலவன தங்கள் மனதில் பன்மடங்கு வேதனையை ஏற்படுத்தும் என்று பெண்கள் ஒரு பட்டியலிட்டிருக்கிறார்கள். அது என்னென்ன.. இதில் எந்தெந்த விஷயங்களை தினமும் நீங்களும் வீட்டில் செய்கிறீர்கள் என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்...
♥இல்லை இதில் ஒன்றை கூட நான் செய்வதில்லை என்று நீங்கள் கருதினால்.. உங்களுக்கு நீங்களே உத்தம புருஷம் என்று பட்டம் அளித்துக் கொள்ளுங்கள்...
♥ஃபன் என்ற பெயரில்... கேலி, கிண்டல், நக்கல் என்ற பெயரில் வெளியாட்கள் அல்லது உறவினர் முன்னிலையில் எல்லை மீறி நகைப்பது. பெட்ரூமில் அந்த கேலி, கிண்டல் ஏற்புடையதாக இருப்பினும். வெளியாட்கள் முன்னியிலையில் அது நிச்சயமாக இன்சல்ட் செய்யும் விஷயம் தான்.
♥அதற்கு அடுத்து பிற சூழல்களிலும் அவர்கள் நம்மை அதே போல காண்பார்கள். இதை ஏனோ தாலி கட்டிய கணவன்மார்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை.
♥ஆசையாக ரெண்டு... கணவனை போலவே இன்று மனைவியரும் அலுவலகம் சென்று வருகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அதே வர்க் ப்ரெஷர், டார்கெட், குடைச்சல், தலைவலி எங்களுக்கும் இருக்கிறது. ஆனால், நாம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தால் மட்டும், உடனே ஆர்டினரி மனைவியாக மாறிவிட வேண்டும். நாங்கள் என்ன சிப் பொருத்திய ரோபோட்டா உடனே மாற. என்ன கோபமாக இருந்தாலும், என்ன வேலையாக இருந்தாலும் முதலில் ரெண்டு வார்த்தை ஆசையாக பேசுங்கள்.. அதன் பிறகு மற்றதை கொட்டுங்கள். காது, கேட்காது... நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை முழுவதுமாக கேட்காமல், அவர்களாக ஒன்றை புரிந்துக் கொண்டு... காட்டு கத்தல் கத்துவார்கள். கடைசியில் நான் அத சொல்ல வரல... இத தான் சொல்ல வந்தேன் என்று விளக்கம் அளித்தால்.. ஓ அப்படியா... நான் இப்படி நெனச்சுட்டேன் சாரின்னு சொல்லி சென்றுவிடுவார்கள். சாரி என்ற ஒற்றை வார்த்தை, நீங்கள் முன் கொட்டிய அத்தனை வார்த்தைகளையும் அள்ளிவிடும் கிளீனர் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. அது எரியும் நெருப்பில் ஊற்றப்படும் பெட்ரோல்.
♥ரெண்டு மாசம்... திருமணத்திற்கு பிறகு குழந்தை என்பது அவசியம் தான். ஆனால், துணை அதற்கு தயாராக இருக்கிறாளா? அவள் மனமும், உடலும் அதற்கு ஒத்துழைக்குமா என்பதை எல்லாம் அறியாமல். கேட்கும் அந்த கொஞ்ச காலத்தை கூட அளிக்காமல்... உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.. பெற்று கொடு என்று கேட்டு கலவியில் அவளை கட்டாயப்படுத்தி உட்படுத்துவது எல்லாம் நரகத்தை விட பெரிய வலி.
♥அபார்ஷன்... சிலமுறை நாமாக விரும்பு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும் போதுதான் அபார்ஷன் ஆகும். அந்த கொடுமை ஒன்று என்றால்... மருத்துவர் அபார்ஷன் ஆனால், கொஞ்ச காலம் ரெஸ்ட் எடுக்க கூறுவார். அதை இவர்கள் கணக்கு வைத்துக் கொண்டு.. இன்னும் ரெண்டு மாசம், இன்னும் இரண்டு வாரம் என நாட்களை எண்ணுவது எல்லாம் மனதில் ரணமாக இறங்கும். நாங்கள் என்ன செக்ஸ் பொம்மையா?
♥நாய் போல... சில சமயம் அவர்களுக்கு எங்கோ இருக்கும் கோபத்தை எங்களிடம் வந்து காண்பிப்பார்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதன் பிறகும், அவர்களுக்கு எல்லா பணிவிடையும் செய்ய வேண்டும். எல்லா வற்றுக்கும் மேலாக, அவர்கள் காரணமே இன்றி நம்மீது எரிந்துவிழுந்த பிறகும் இரவில் முந்தியை விரிக்க வேண்டும். எங்கள் ஊரில் செருப்பில் அடித்து சாப்பாடு போடுகிறான் என ஒரு பழமொழி கூறுவார்கள். இது! செருப்பில் அடித்து சாப்பாடு பிடுங்கி திண்பதாக இருக்கிறது.
♥வெறுப்பு! ஆண்கள் ஆசையாக வரும் பொழுது, உடலும், மனதும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே, நாம் என்றாவது ஆசையை வெளிப்படுத்தும் போது, அவர்கள் நம்மீது எனக்கு வேற வேலை இருக்கு என்று கடித்துக் கொள்வார்கள். இது கடியை நீங்கள் ஆசையை வெளிப்படுத்தும் போது நாங்கள் வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும்.
♥எங்களுக்கும் லீவ் தான்... அதென்னவோ தெரியவில்லை... சனி, ஞாயிறு ஆண், பெண் இருவருக்கும் தானே லீவ். ஆனால், கணவன்மார்கள் என்னவோ அது அவர்களுக்கு மட்டும் தான் லீவ் என்று நினைத்துக் கொள்கிறார்கள். லீவ் நாட்களிலும் நாங்கள், அந்த ஒருவாரம் வைத்திருந்த துணி துவைத்து வீடு சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் காலாட்டிக் கொண்டு டிவி பார்ப்பார்கள், வெளியே நண்பர்களுடன் சுற்றுவார்கள். ஏன் அந்த நாளில் எங்களுக்கு உதவியாக இருந்தால் தான் என்ன?
♥அடம்! ஊரில் யார் என்ன சொன்னாலும் கேட்பார்கள். இதுவே, மனைவி இந்த ஹேர் ஸ்டைல் வேண்டாம்.. இப்படியான துணி உடுத்த வேண்டாம் என்றால் மட்டும் கேட்பதற்கு அவர்களது ஈகோ இடம் தராது. நாங்கள் ஒன்றும் உங்களை வேறு பெண்கள் பார்த்துவிட கூடாது என்பதற்காக மாற்றங்கள் செய்துக் கொள்ள கூறுவதில்லை. பிறர் யாரும் என்னடா இவன் இப்படி பரட்டை தலை, கிழிஞ்ச பேண்ட் போட்டுக்கிட்டு சுத்துறான் என்று மோசமாக பேசிவிடக் கூடாது என்று தான் கூறுகிறோம். மனைவியை விட வேறு எந்த பெண்ணும், கணவனை அழகுப்படுத்தி பார்த்துவிட முடியாது என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
0 Comments
Thank you