♥வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.
♥ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.
♥ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
♥மாணவன் அமைதி காக்கிறான்.
சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.
♥ஆசிரியர் அனுமதிக்கிறார்.
♥மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா?
♥ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா?
♥மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.
♥இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
♥ஆசிரியர் : ஆம், இருக்கிறது.
♥மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம்.
♥உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல.
♥அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை.
♥உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை.
♥அந்த மாணவன் வேறு யாருமில்லை.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
# ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...
0 Comments
Thank you