HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வீட்டு வேலைக்கு மனைவிக்கு என்ன விலை?

♥வீட்டு வேலைக்கு மனைவிக்கு என்ன விலை?

♥வீடுகளில் பெண்களின் உழைப்பு என்ன என்பதை அறிய ஒருவர் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. பெண்கள் இல்லாமல் ஆண்கள் ஒரு வீட்டை எப்படி வைத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தாலே போதும். பெரும்பாலும் அது ஒரு லாட்ஜாக மாறிவிடும்; அல்லது குப்பைத்தொட்டியாகக் காட்சியளிக்கும். ஆண்களும் குழந்தைகளும் ஒரு வீட்டை நாள் முழுக்க கலைத்துக்கொண்டே இருக்கிறார்கள். பெண் அதை இடையறாமல் அதன் ஒழுங்கிற்குள் கொண்டு வந்துகொண்டே இருக்கிறாள்.

♥ ஒரு நகரத்தில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் இரண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டுப் போவதற்கு குறைந்தபட்ச சம்பளம் மூவாயிரம் . ஐந்தாயிரம் ரூபாய். ஆனால் மனைவி என்ற ஒரு அந்தஸ்துடன் நாள் முழுக்க ஒரு குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டே இருக்கும் ஒரு பெண்ணின் உழைப்பிற்குப் பணத்தால் விலை மதிப்பிட்டால் பெரும்பாலான கணவர்கள் திவாலாக வேண்டியிருக்கும்.

♥வெளிநாடுகளில் வேலை செய்யும் பல இந்தியர்கள், இலங்கையர்கள் ‘உலகின் மலிவான வேலைக்காரிகள் மனைவிகள்தான்’ என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்காகத் தவமிருக்கும் பல பைத்தியக்கார இந்திய இலங்கை பெற்றோர்களுக்கு இது தெரிவதே இல்லை.

♥ஒரு வீட்டு வேலைக்காரியை நீங்கள் நான்கு வார்த்தை கோபமாகப் பேசினால் அடுத்த நாளிலிருந்து அவள் நீங்கள் இருக்கும் திசையைக்கூட பார்க்க மாட்டாள். ஆனால் மனைவியை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்; எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். சம்பளம் இல்லாத, லீவு கேட்காத, வேலையை விட்டுவிட்டுப் போகாத, ஒரே உழைக்கும் வர்க்கம் உலகிலேயே இந்திய இலங்கை மனைவிகள்தான்.  பலதார மணமுறை தடை சட்டம் மட்டும் இல்லையென்றால் நிறைய பேருக்கு வேலைக்கு ஆள் கிடைப்பது சுலபமாகிவிடும்.

♥வீட்டில் பெண்கள் செய்யும் வேலை வெறும் கடமை அல்ல, அதற்கு ஒரு சமூக மதிப்பு இருக்கிறது, பொருளாதார மதிப்பு இருக்கிறது என்பதை இதன் வாயிலாக அங்கீகரிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு ஆணின் அத்தனை அன்றாடக் கடமைகளையும் ஒரு பெண் கவனித்துக்கொள்வதன் மூலம், அந்த ஆண் தனது வேலையை முழு ஆற்றலுடனும் கவனத்துடனும் செய்கிறான். ஒரு ஆணை முழுமையாக வேலைக்குத் தயார்படுத்துவதில் ஒரு பெண்ணின் பங்கு பெரும்பான்மையாக இருக்கிறது. வீடுகளில் பெண்களின் உழைப்பு இல்லாவிட்டால் அலுவலகங்களில் ஆண்களின் உற்பத்தித் திறன் கடுமையாக வீழ்ச்சியடையும். அந்த வகையில் அந்த நிறுவனத்திற்காக ஒரு ஆண் ஊழியரின் மனைவி மறைமுகமாகப் பணிபுரிகிறாள்.

♥இரண்டாவதாக, ஒரு நாட்டிற்குத் தேவையான ஆரோக்கியமான பிரஜைகளை வளர்ப்பதில் பெண்களே பிரதான பங்கு வகிக்கிறார்கள். ஒரு முறை சிங்கப்பூரில் அன்னையர் தினக் கூட்டம் ஒன்றில்.நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஏராளமான பெண்கள் அமர்ந்திருந்தார்கள். , ‘‘இது உங்கள் வாழ்க்கையில் ஒரு துக்க நாள்’’ என்றேன். அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார்கள். ‘‘உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த ஒரு பருவத்தை உங்கள் குழந்தைகளை ஆளாக்குவதற்கு மட்டுமே செலவிட்டிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 20 வருடங்கள் உங்களுடைய கற்பனையையும் படைப்பாற்றலையும் ஆளுமைத் திறனையும் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் ஒன்றிரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்கு மட்டுமே செலவிட்டிருக்கிறீர்கள். அன்னையாக இருப்பது ஒன்றே இந்த உலகின் மிகச் சிறந்த புனிதக் கடமை என்று உங்களை நம்ப வைத்ததன் மூலம், இந்த சுய பலியை எந்தத் தயக்கமும் இன்றி மேற்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குழந்தைகள் கல்லூரிக்கோ வேலைக்கோ சென்றுவிட்ட இந்த நாட்களில், உங்கள் வாழ்க்கையை எங்கிருந்து மறுபடி தொடங்குவது என்று யோசித்துக்கொண்டு இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்’’ என்று பேசினேன். அந்தப் பெண்களின் முகம் வாடிவிட்டது. பலரது கண்கள் கண்ணீரில் பளபளத்தன.

♥குழந்தைகளுக்காக ஒரு பெண் செய்யும் இந்த உழைப்பு, ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கு - அதன் வளர்ச்சிக்கு - செய்யும் உழைப்பு இல்லையா?
ஆனால் பெரும்பாலான பெண்களின் குடும்ப உழைப்பு எந்த நிலையிலும் அங்கீகரிக்கப்படுவதே இல்லை. அன்பு, பாசம், புனிதம் என்ற போர்வையில் இந்தியக் குடும்ப அமைப்பு ஈவு இரக்கமற்ற ஒரு சுரண்டல் மையமாக இருக்கிறது என்பதே உண்மை. பெண்கள் இந்த நாட்டில் எந்த ஊதியமும் இல்லாமல் - அல்லது மிகக் குறைந்த பலன்களுடன் - பிரமாண்டமான உணவுக்கூடங்களையும் குழந்தைகள் காப்பகங்களையும் நடத்தி வருகிறார்கள். இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால் கணிசமான பெண்கள் எந்த மனரீதியான ஈடுபாடும் இன்றி ஆண்களின் பாலியல் தேவைகளையும் தீர்த்து வைக்கிறார்கள்.

♥வேலைக்குப் போகும் பெண்கள்கூட தங்கள் வருமானத்தில் உரிமை கோர முடியாத ஒரு நாட்டில்  எங்களுடைய வருமானத்தையெல்லாம் பெண்களிடம்தான் கொடுக்கிறோம் என்று சில ஆண்கள் கிண்டல் செய்யலாம். 

♥ இல்லத்தரசிகளுக்கு உண்மையிலேயே ஊதியம் வழங்க முடியாமல் போகலாம். ஆனால் எவ்வளவு உழைப்பை அவர்களிடமிருந்து இலவசமாகச் சுரண்டுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவாவது சிறந்தது.

Post a Comment

0 Comments