HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கண்டிப்பாக_படியுங்கள்

#கண்டிப்பாக_படியுங்கள்
♥ஆண்களே... உங்கள் மனைவியை வெறுக்கிறீர்களா?.. விவாகரத்து செய்ய நினைக்கிறீர்களா?... வேறு பெண்ணுடன் வாழ ஆசைப்படுகிறீர்களா?.. இதை படியுங்கள்  உங்களை சிந்திக்கவும் மனைவியை நேசிக்கவும்  வைக்கும் என நம்புகிறேன்...... 

♥சில காலமாக எனக்கும் மனைவிக்கும் இடையில் பலத்த இடைவெளி... வழமைபோல்  நான் வேலை முடிந்து வீட்டிற்கு  சென்றபோது என் மனைவி சரன்யா சமையலறையில் இருந்தாள். நான் அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்த போது எந்த சலனமும் இன்றி எனக்கு சாப்பாடு பரிமாறத் தொடங்கினாள்.

♥நான் அவளின் முகத்தை பார்க்காது அவளின் கைகளை பற்றியவாறு,"எனக்கு விவாகரத்து வேண்டும் எந்தவித பிரச்சனையும் இன்றி தந்துவிடு ப்ளீஸ் "என்றேன்.

♥அவள் சாதாரணமாக "ஏன்?" என்றாள் நிச்சயமாய் அவள் அதை சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவளது நடத்தையில் புரிந்தது. என் தட்டில் ரசம் ஊத்தினாள்..

♥நான் அதை ரசித்து சாப்பிடும்  மன நிலையில்  இருக்கவில்லை. எப்படியாவது எனது நிலைப்பாட்டை சொல்லி விவாகரத்து வாங்கியே  ஆக வேண்டுமென நினைத்தேன்.

♥நான் என்"அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும்  நான்சியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்.நான் இல்லை என்றா அவள் இறந்துவிடுவாள் . எனக்கு உன்னுடன் வாழ பிடிக்கவில்லை தயவு செய்து விவாகரத்து வேண்டும் என்றேன்"தீர்க்கமாய்.
எதுவும் பேசவில்லை அவள் திரும்பி நின்று கொண்டாள். சீரியசை உணர்கிறாள் போல்...

 ♥திக்கு தெரியாது கரைபுரண்டு ஓடும்  நட்டாற்றில் அவளோடு என் செல்ல  மகளையும் விடுவதாய் மனம் குத்திக் காட்டியது உறுத்தியது ஆனால் நான்சி கண்களுக்குள் வந்தாள்.... 

♥குடியிருக்கும் வீடு,கார்,மற்றும் சொத்தின் 30% அவளுக்குரியது என தயாராக  எழுதப்பட்ட பத்திரத்தை அடுத்த நாளே மனைவியிடம்  நீட்டினேன்.

♥நேற்று அமைதியாக இருந்தவள் இன்று 
எரிமலையாய் வெடித்து சிதறினாள். படித்துகூட பார்க்காமல் பத்திரத்தை வெறி கொண்ட மட்டும் கிழித்தாள்.

♥பதினொரு வருடமாய் என்னுடன் தன் வாழ்வை பகிர்ந்தவள் இப்போது எனக்கு அந்நியமாய் தெரிந்தாள். பிழிந்து வீசிய கரும்பாக கிடந்தாள்...

♥கதறி சத்தமாய் அழுதாள். பொருட்களை வீசி ஆர்ப்பாட்டம் பண்ணினாள். பலம் கொண்ட மட்டும் என் சட்டையைப் பிடித்து இழுத்து உலுக்கினாள். இரக்கமின்றி மீண்டும் சொன்னேன்,எனக்கு "விவாகரத்து வேண்டும்".தந்துவிடு 

♥அழுது புரண்டு சோர்வடைந்து  போயிருந்தாள். பேயறைந்தது போல் இருந்தாள். விவாகரத்து எனும் வார்தையால் எதை எதிர்ப்பார்த்தேனோ அது நடந்தது.

♥அடுத்த நாளை என் காதலி நான்சியுடன்  கழித்து விட்டு மறுநாள்  சென்ற போது வீட்டு  மேசையிலிருந்து சரன்யா எதையோ ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தாள்.

♥எனக்கு தர விவாகரத்து ஒப்பந்தம் அது .
சம்மதித்து எழுதி இருந்தாள். என்னிடமிருந்து  சொத்து பணம் எதுவும் வேண்டாமென்று எழுதியிருந்தாள்.  இன்னும் ஒரு மாதத்தில் மகளுக்கு பாடசாலையில்  பரீட்சை இருப்பதாகவும், இது பற்றி எதுவும் அவளுக்கு புரியாதவாறு வீடு வழமைபோல் இருக்கட்டும் என்று எழுதியிருந்தாள்.

♥முறிந்து போகும்  ஒரு திருமணம் மகளை பாதிக்கக் கூடாதென எண்ணியிருக்கலாம்.
மேற்கொண்டு ஒரு நிபந்தனை விதித்திருந்தாள் எனக்கு. அது  எப்படி எம்  திருமண இரவன்று வாசற் கதவிலிருந்து படுக்கையறை வரை அவளை தூக்கி வந்தேனோ  அதே போல ஒரு மாதம்  ஒவ்வொரு நாளும் தூக்கி வர வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தாள்.
வெறுப்புடன் சிரிப்பாக  இருந்தது. என்னுடனான கடைசி நாட்களை இன்பமாக கழிக்க நினைக்கிறாள் என ஏளனமாய் நினைத்துக் கொண்டேன்.

♥ வேண்டா வெறுப்பாக முதல் நாள் அவளை தூக்கிச் சென்ற போது இருவருமே சங்கடமாகவே உணர்ந்தோம். மகள்  சந்தோசமாக புதிதாக பார்த்தாள் .கடந்த பத்து வருடமாக அவள்  தன் தாய், தந்தையை இப்படி நெருக்கமாக பார்த்திருக்கவில்லை என்பது உண்மை.

♥சூப்பர்.... "அப்பா அம்மாவை தூக்கிச் செல்கிறார்" என குதூகலித்தாள். விவாகரத்து பற்றி அவளுக்கு தெரிய வேண்டாம் என்றாள் படுக்கையில்  இறக்கிவிட்ட போது எங்கோ பார்த்தபடி.
திருமணமன்று இருந்த ஆசை மனைவி இப்ப மங்கிப்போயிருந்தாள்....

♥மறு  நாள் அவளை தூக்கும் போது சற்று இலகுவாக இருந்தது. உரிமையுடன் மார்பில் சாய்ந்திருந்தாள். அவளது கூந்தலின் மணம் என்னை ஏதோ செய்தது. நீண்ட நாட்களாக அவளை நான் அருகில் நெருக்கமாக பார்கவில்லை ரசிக்கவில்லை என்பதை உணர்ந்தேன். அவளின்  முகத்தில் சில சுருக்கங்கள் இருந்தது. தலையில்  சில நரைமுடிகள் எட்டிப் பார்த்தன. கூந்தலின் அடர்த்தி வெகுவாக குறைந்திருந்தது.
அன்று கொடியிடையாளாய் இருந்தவள் சற்று பருத்திருந்தாள். திருமண வாழ்வு அவள் அழகை,கவர்ச்சியை ஒட்டுமொத்தமாக  கொள்ளையடித்திருந்தது.
என்னுடன் வாழ்ந்ததில் எனக்காக தன் இளமையை தொலைத்து விட்டிருந்தது தெரிந்தது. ஆனாலும் நான்சியின் அழகு இளமை என்னை இவளை விட அவள் பக்கம் சாய்த்துவிட்டது...

♥,ஐந்தாம் ஆறாம்  நாட்களில் எனக்காய் தன் வாழ்வை அர்ப்பணித்தவள்  மீண்டும் நெருக்க்கமாக தோன்றியது.
நாட்கள் செல்லச் செல்ல விரிசல்கள் காணாமல் போயிருந்தன. இப்போது  அவள் சுமையாய் தெரியவில்லை. அவளை தூக்கும்  போது வெறுப்பாய் தெரியவில்லை. எமது செயல் மகளுக்கும் பழகிவிட்டிருந்தது.

♥இன்றோடு ஒருமாதம் முடியும் கடைசி நாள். காலையில் திருமணமான அன்று கட்டிய சேலையை கட்டி தலை நிறைய பூவோடு  கண்ணாடி முன் நின்று நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள். இந்த ஒரு மாதத்தில்  நன்றாக மெலிந்து போயிருப்பது தெரிந்தது. சேலையில் அவளின் இடை புதுப்பெண்ணாக அவள் வந்தபோது எப்படி தெரிந்ததோ அப்படியே இப்பவும் பளிச் என தெரிகிறது... 

♥அவள் மீது ஆசையும் பரிதாபமும் வந்தது
இந்த பெண் தன் திருமணத்தின் பின் கணவனுக்காக  எத்தனை வடுக்களை மௌனமாய் ஏற்றுக் கொள்கிறாள் என தோன்றியது.

♥ பின்னால் சென்று மெதுவாக அவளது இடையை  பற்றினேன். திரும்பி என் கண்களை ஊடுறுவினாள். சோகம் ததும்பிஇருந்தாலும் அவளின் கண்களை பார்க்க தைரியமின்றி  என் மனம் மாறிவிடுமோ என்றஞ்சி பார்வையை தவிர்த்தேன். ஆனால் முதலிரவு அன்று அவளிடம் இருந்த வாசமும் வெட்கமும் அப்படியே இருந்தது.. ஆக என் மனம் தான் மாறி இருக்கிறது...  அவள் மாறவில்லை என்ற உண்மை உறுத்தியது....

♥அப்பா "இன்று நீங்கள் அம்மாவை தூக்கவில்லையா?"என்றாள் மகள் .அவளைப் பொறுத்தவரை அது  ஒரு மாதமாக தினசரி வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருந்தது.

♥தூக்கினேன்....இன்று தானே கடைசி நாள். தூக்கிய போது அவள்  கைகளை என்  கழுத்துகளை வளைத்து கோர்த்துக் கொண்டாள். என்னையே குறும்பாக பார்த்தாள்... நாளை உங்களுக்கு விடுதலை.. இன்னொருத்தி உங்கள் மடியில் என்றாள் சினுங்கலாக...  நான் அவளை கொஞ்சம்  இறுக்கிய போது சொகுசாக நெஞ்சோடு அணைந்தாள். அவளின் மார்பகங்கள் பல வருடத்தின் பின் என் மார்போடு முட்டி உரசியது... கல்யாண நாளன்று காதல் ததும்ப அவளின் உடலையும் இந்த மார்பகத்தையும் எப்படி எல்லாம் புகழ்ந்தேன்.. அது இன்று  நடந்தது போலவே இருக்கிறது இப்போது... மெதுவாக  ஒவ்வொரு நடையாக எடுத்து வைத்தேன்.
 
♥கடைசியில் மனைவி மீதினில் என் காதல் என்னை ஒரு அடி கூட நகர்த்த விடவில்லை. அவசரமாய் அவளை கையிலிருந்து இறக்கிவிடக் கூடாதென நினைத்தேன்.

 ♥எங்கள் திருமண முதலிரவில் அவளை ஏந்தியபடி என் "மரணம் வரை உன்னை பிரிய மாட்டேன்" என்ற நான் கூறிய  வாக்குறுதி இனிமையாய் குத்தியது.....

♥ வழமைபோல் வேகமாக இன்றி இன்று சற்று மென்மையாக மெதுவாக   சரன்யாவை  படுக்கையில் கிடத்தினேன்.. என் கைகளை பிடித்தாள் ... எனக்கு கடைசியாக உங்கள் கையால் குங்குமம் வைத்துவிடுங்கள் என எழுந்து நின்றாள்.... 

♥அவளின் முகத்திற்கு நேராக நின்று நெற்றியில் இருந்த குங்குமத்திற்கு மேலாக நான் வைக்கும் போது அவளின் மூச்சுக்காற்று என்  முகத்தில் பட்டது... இதுவரை அது அவளுக்காக மூச்சை விட்டதில்லை ... எனக்காகவே வாழ்ந்தவளை நான் கைவிடுவது என்பது என்னால் நம்பமுடியவில்லை.... அவளை அணைக்கவேண்டும் போல் இருந்ததே.... 

♥ காதலி நான்சியிடம் விரைந்து சென்றேன்... என்னை கண்டவுடன் கட்டியணைக்க வந்தாள்... தடுத்துவிட்டு ,"மன்னித்துவிடு என் மனைவி சரன்யாவை  கைவிடும் எண்ணம் எனக்கில்லை. என் வாழ்வும் என் மரணமும் அவளுடன் தான்" என்று முடிவாய் சொன்னேன். நான்சியின்  பதிலிற்காய் காத்திருக்க தோன்றவில்லை. நான் இல்லை என்றா ஆயிரம் பேர் நான்சிக்கு... ஆனால் நான் இல்லை என்றா என் சரன்யா க்கு யாரும் இல்லை... என நினைத்தேன் அழுகை பொங்கியது.... வேகமாக மனைவி சரன்யாவை பார்க்க  விரைந்தேன்

♥ வீதியில் பூக்கடையில் சரன்யா  மிகவும் விரும்பும்  ரோஜாக்கள் நிரம்பிய ஒரு பொக்கேயை வாங்கி." நீ என் வாழ்க்கை"என்று ஒரு அட்டையில் எழுதிக் கொண்டு வீடு நோக்கி விரைந்தேன்.

♥ வீட்டில் அறையில்  அதே கட்டிலில்,
 என் சரன்யா தேவதைபோல் படுத்திருந்தாள்.. அருகில் சென்று பூ பொக்கையை நீட்டும் பே்துதான் பார்த்தேன் அவள் அழகான பிணமாக, சடலமாக, உயிரற்றிருந்தாள்..

♥கடந்த சில வருடங்களாக அவள் என்னுடன்  போராடிக் கொண்டிருந்ததை நான் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அத்தனை போராட்டத்திலும் என்னை ஒரு நல்ல கணவனாக, அன்பான தந்தையாக என் மகளிடம் நிரூபிக்க ஆசைப்பட்டிருக்கிறாள்.

♥மரணத்தை தவிர வேறெதுவும் நம்மை பிரிக்காது என்பதை உணர்த்த முயற்சித்திருக்கிறாள். நான் வார்த்தையாக கூறியதை அவள் செயலில் காட்டிவிட்டாள்...

♥தூக்கமாத்திரையை அதிகம் எடுத்துக்கொண்டிருந்தாள்... அவளை நட்டாற்றில் விட நினைத்த என்னை நடுவீதியில் விட்டு சென்றுவிட்டாள்..  கதறி அழுதாலும் இனி எனக்கு யார்.......

♥மகள்  என் கால்களை கட்டிக் கொண்டு அழுதாள். "சரன்யா  ,இனி என் வாழ்வு நம் பிள்ளைக்கானது" என மௌனமாய் அவள் மனதிடம் சொல்லிக்கொண்டேன் ..!

Post a Comment

0 Comments