"ஆண்களுக்கு பெண்கள் ஒருபோதும் நிகரானவர்கள் அல்ல..."
இப்படி சொன்னதும் கோவம்
வருதா பெண்களே.. கோபம்
வேண்டாம்.. முழுவதும்
படியுங்கள் உண்மை புரியும்..
ஆண்களுக்கும் தான்..😁
ஆண்களுக்கு பெண்கள் ஒருபோதும் நிகரானவர்கள் அல்ல...!
பெண்கள் தங்களை ஆணுக்கு நிகர் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆண்களுக்கு பெண்கள் ஒருபொழுதும் நிகரானவராக இருக்க முடியாது.
ஆண்களை விட பெண்கள் பல மடங்கு உயர்ந்தவர்கள்.. ஒரு பெண்ணிடம் நீ எதைக் கொடுத்தாலும், அதை அவள் பன்மடங்காக பெரிதாக்கி சிறப்பாக திருப்பிக் கொடுப்பாள்..
உன் உயிரணுவை கொடுத்தால்.... அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்..!
நீ ஒரு வீட்டை கொடுத்தால்... அவள் அதை குடும்பமாக மாற்றிக் காட்டுவாள்...!
நீ மளிகைப் பொருட்களை கொடுத்தால், அவள் விருந்து படைப்பாள்..!
புன்னகையை நீ அளித்தால், தன் இதயத்தை திருப்பிக் கொடுப்பாள்..!
கொடுப்பது எதுவாயினும், அதனை சிறப்பாகவே திருப்பி கொடுப்பது பெண்ணின் குணம்..!
எனவே அவளுக்கு நீ சிறிய அளவில் ஏதாவது தொல்லை கொடுத்தால்..,
அதை விட டன் கணக்கில் உனக்கு திருப்பிக் கொடுப்பாள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்..
ஆண்களே பெண்களை மதியுங்கள்..
பெண்மையை
போற்றுங்கள்..🙂
வில்லியம் கோல்டிங் (நாவலாசிரியர்.)
0 Comments
Thank you