மனைவியாய் இறுதிவரை ஒரு தோழியாய் வரப்போகும் அவள் யார் என்று அறிய ஆசை..!!
வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழுந்து அவள் தூங்கும் அழகை ரசிக்க ஆசை..!!
தினமும் மலர் சூடி அவள் நெற்றியில்
என் இதழ் சேர்க்க ஆசை..!!
யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில் அவளை நனைக்க ஆசை..!!
யாரும் இல்லா சாலையில்
அவள் கைபிடித்து நடக்க ஆசை..!!
மழையில் நனைந்த என் தலையை அவள் புடவை நுனிகொண்டு துடைக்க ஆசை..!!
என் உயிர் சுமக்கும் அவளை என்றும்
என் கண்ணுக்குள் வைத்து பார்க்க ஆசை..!!
என் உயிர் பிறந்த பின்பும்
அவள் முகம் முதல் பார்க்க ஆசை..!!
இப்படியே 60 ஆண்டு காலம்
அவளோடு நான் வாழ ஆசை..!!
அன்றும் கோலுன்றி அவள் நடவாமல்
என் தோள் பிடித்து நடக்க ஆசை..!!
இருவர் இறக்கும் நேரத்திலும் அவள் மடியில்
என் தலை இருக்க அவள் என்னை பார்த்து புன்னகைக்க இருவரின் உயிர்பிரிய ஆசை.!!!
"ஆயிரம் ஆயிரம் ஆசைகள் என் மனதினுள்"
0 Comments
Thank you