HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வாயில்லா பூச்சி!

♥வாயில்லா பூச்சி!

♥''ஏய்... நான் சொல்றத செய்யாம அப்படி என்ன வேலை உனக்கு... மீன் வாங்கி குழம்பு வைக்க சொன்னா என்ன செஞ்சு வச்சிருக்கே?'' கண்கள் கோவைப் பழமாகச் சிவக்க, குடிபோதையில் தடுமாறியவாறு ருக்குவை முறைத்தான் அவளின் கணவன்.
''கையிலே காசில்ல; சம்முவம் நோட்டு வாங்கணும்ன்னு சொன்னான்... இருந்த காச அவன் கிட்டே கொடுத்துட்டேன். காரக் குழம்பு வச்சுருக்கேன் சாப்பிடு; நாளைக்கு மீன் வாங்கி சமைச்சு வைக்கிறேன்,” என்று கூறியவளின் தலைமுடியை கொத்தாக பிடித்திழுத்து, கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

♥''என்ன தைரியம்... பதிலா பேசுறே... உன் மவன பெரிய படிப்பு படிக்க வைக்கப் போறியோ... நாளைக்கு அவனும் மம்மட்டிதான் தூக்கப் போறான்; ஞாபகம் வச்சுக்க. கழுதை... இனி நோட்டு வாங்குனேன், புஸ்தகம் வாங்கினேன்னு தெரிஞ்சுது... கொன்னு போட்டுடுவேன்,'' என்றான்.

♥''இங்க பாருய்யா.. என் புள்ளைய படிக்க வச்சு ஆபீசராக்கத்தான் போறேன். நீ கொண்டு வர்ற காசிலே அவன் ஒண்ணும் படிக்கல. நான் கூலி வேலை செஞ்சு அவனை படிக்க வைக்கிறேன், ஞாபகம் வச்சுக்க,” என்றாள் கண்ணீருடன்!
''எதிர்த்தா பேசற...'' என்று அவள் முதுகில் ஓங்கி அடித்தான்.
குடிசையின் ஒரு மூலையில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் எழுதிக் கொண்டிருந்த சண்முகம், குடிபோதையில் அப்பா, அம்மாவை அடிப்பதைப் பார்த்து, கண்கலங்க உட்கார்ந்திருந்தான்.

♥அவளை அடித்த வேகத்தில் சண்முகம் பக்கம் திரும்பியவன், ''என்னடா பெரிசா படிக்கிற நாயே... உன்னைப் படிக்க வைக்கிறேன்னு தான் காசையெல்லாம் கரியாக்கறா... நல்ல சோறு தின்ன முடியல... கசமாலம்..'' என்று கூறி, அவன் எதிரில் இருந்த புத்தகங்களை எட்டி உதைக்க, அவை மூலைக்கொன்றாக சிதறி விழுந்தன.

♥ஆத்திரத்துடன் எழுந்து வந்த ருக்கு, ''ஏய்யா... உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... அவன் உன்னை என்ன செய்தான்... வாயில்லா பூச்சி அவன்... படிச்சிட்டிருக்கிற புள்ளையோட புஸ்தகத்த எட்டி உதைக்கிறியே... உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா... நீ அடிக்கிற அடி, உதையை வாங்கிக்கதான் நான் ஒருத்தி இருக்கேனே... அது, உனக்கு பத்தலையா...'' என்றவள், வாய்விட்டு அழ ஆரம்பித்தாள்.

♥''சை... வீட்டுக்கு வர்ற புருஷனுக்கு வகையா சமைச்சு போட வக்கில்ல; பேச்சு பேசறியா... மருவாதையா சொன்னதைக் கேட்டு நடந்தா இங்கே இரு; இல்லாட்டி, நீ பெத்து வச்சிருக்கியே புள்ள... அவனைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிடு. என்னோட குடித்தனம் நடத்த வேற நல்ல ஆளா பார்த்துக்கிறேன். போக்கிடம் இல்லாத கழுத எதிர்த்தா பேசுற,'' என்று திட்டியபடி குடிசை படலை திறந்து வெளியேற, சிதறிய புத்தகங்களை எடுக்கும் மகனைப் பார்த்தாள் ருக்கு.

♥''ரொம்ப வலிக்குதாம்மா... என்னாலதானே நீ அப்பாகிட்டே அடி வாங்கினே... காசில்லன்னு சொல்லியிருந்தா நாளைக்கு நோட்டு வாங்கி யிருப்பேன்லே...'' என்று குரல் தழுதழுக்க சொன்னான் சண்முகம்.
''அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. இது ரெண்டு நாளைக்கு ஒரு தரம் நடக்கிற கூத்துதானே... உங்கப்பன்கிட்டே அடி வாங்கியே எனக்குப் பழகிடுச்சி. எது எப்படிப் போனாலும், நீ படிக்கிறத மட்டும் நிறுத்திடக் கூடாது. உங்கப்பா மாதிரி கைலி கட்டிக்கிட்டு, லோடுமேன் வேலைக்குப் போகாம, ஆபீசிலே வேலை பாக்கணும்; அதுக்கு நீ நல்லா படிக்கணும்பா,'' என்றாள்.
''கவலப்படாதேம்மா... ப்ளஸ் 2வுல நல்ல மார்க் வாங்கி காலேஜில சேர்ந்திடுவேன்...''
மகனின் ஆறுதல் வார்த்தையைக் கேட்டு, கண்களை துடைத்துக் கொண்டாள் ருக்கு.

♥''உன் நிலை புரியுது சண்முகம். ப்ளஸ் 2வுல நல்ல மார்க் எடுத்திருக்கே... குடிகார தகப்பன்; கூலி வேலைக்குப் போய் படிக்க வைக்கிற அம்மா. இந்நிலையில படிப்பு செலவுக்கு என்ன செய்றதுன்னு நீ கவலைப்படுறது எனக்கு புரியுது. எனக்குத் தெரிஞ்ச நல்ல மனம் படைச்ச வசதியுள்ள பெரிய மனுஷன் ஒருவர், உன்னை மாதிரி படிக்கிற ஏழை பிள்ளைகளுக்கு, படிப்பு செலவுக்கு உதவி செய்றாரு. அவர்கிட்டே உன்னைப் பத்தி சொல்லி, நீ மேற்கொண்டு படிக்க பணத்துக்கு ஏற்பாடு செய்துட்டேன். நீ, சந்தோஷமா காலேஜுக்கு போய் படி,'' என்று தமிழ் வாத்தியார் சொல்ல, அவரை நன்றியுடன் பார்த்தான் சண்முகம்.

♥''புள்ளய படிக்க வைக்கிறேன்னு, காசை தண்ணியா செலவழிச்சு, ஸ்கூலு படிப்பை படிக்க வச்சுட்டே... தொலையட்டும்ன்னு விட்டேன். இப்ப, நம்ப தெக்கு தெரு நாடார் கடையில கணக்கு எழுத ஆள் வேணுமாம்; உன் புள்ளைய நாளையிலிருந்து அங்கே வேலைக்கு அனுப்பு,'' என்றான் கண்டிப்புடன்!
''இங்கே பாரு... புள்ளயோட படிப்பு விஷயத்தில தலையிடாதே... நீ சம்பாதிக்கிற காசை குடிச்சு அழிக்கிறே... வீட்டு செலவுக்குன்னு ஒரு பைசா தர்றது இல்ல; இருந்தாலும் உனக்கு சோறு ஆக்கிப் போடறேன். நாலு இடத்தில பிச்சையெடுத்தாவது என் புள்ளைய நான் காலேஜுல படிக்க வெச்சுக்கிறேன்; நீ உன் வேலைய பாத்துக்கிட்டு போ,'' என்றவளிடம், கோபமாக எழுந்து வந்தவன், ''என்னடி திமிரா பேசற... என்னை என்ன கையாலாகாதவன்னு நினைச்சியா... நான் உன் புருஷன்; நீயும், உன் மவனும் எனக்கு அடங்கி தான் இருக்கணும். மருவாதையா நான் சொன்னபடி உன் மகனை வேலைக்கு அனுப்பற வழியப் பாரு,'' என்றான் ஆத்திரத்துடன்!

♥''முடியாது; இந்த விஷயத்தில நீ சொல்றத கேட்க மாட்டேன்,''என்று கூறியதும், அவனின் ஆத்திரம் தலைக்கேறியது.
அருகில்கிடந்த  கம்பை எடுத்து,    அவளை விளாசியவன், ''நாயே... உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சுடி. என்னை மீறி எதுவும் செய்யணும்ன்னு நினைச்சே... உன்னையும், உன் மவனையும் துரத்தி அடிச்சிடுவேன் ஜாக்கிரத,'' என்றான்.
வலி பொறுக்க முடியாமல், அலறினாள் ருக்கு. அம்மாவின் அழுகைச் சத்தம் கேட்டு, வேகமாக குடிசை வாசலை திறந்து உள்ளே வந்தான் சண்முகம்.

♥''வாடா ஆபீசரு... பரிட்சையிலே பாஸ் செய்துட்டீயாமே... உன்னை காலேஜுல சேர்க்கணும்ன்னு உன் ஆத்தா ரொம்ப வாய் கொழுப்பா பேசறா. உனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கேன். உன் ஆத்தா உசிரோடு இருக்கணும்ன்னா, படிப்பை மூட்டை கட்டி வச்சுட்டு வேலைக்குப் போற வழியைப் பாரு,'' என்றான் கோபத்துடன்!
''அவன ஏன்யா அதட்டறே... அவனே வாயில்லாபூச்சி,'' என்று மகனுக்காக பரிந்து பேசியவள், ''சம்முவம்... அவர் சொல்றத நீ கேட்க வேணாம்; நீ படிக்கணும். என் புள்ள காலேஜ் படிப்பு படிக்கணும்,'' என்றாள்.
''என்னடி... இவ்வளவு அடி வாங்கியும், உன் திமிர் அடங்கலையா?'' என்று கேட்டு, ருக்குவை ஓங்கி ஒரு உதை உதைத்தான்.

♥அவள் தடுமாறி மூலையில் விழ, அருகில் நின்ற சண்முகம், அப்பாவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, ''இங்கே பாரு... அப்பாங்கிற மரியாதையக் காப்பத்தணும்ன்னா இன்னையோட எங்க அம்மா மேலே கையை வைக்கிறத நிறுத்திடு. நான் காலேஜில் சேர்ந்து படிக்கத் தான் போறேன்; நீ சல்லிக் காசு செலவு செய்ய வேணாம். எல்லா செலவையும் நாங்க பாத்துப்போம். தாலி கட்டின ஒரே காரணத்துக்காக, குடிச்சுட்டு வந்து எங்க அம்மாவ அடிக்கிறத இனியும் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.

♥''நீ இல்லாம எங்களால நல்லபடியா வாழ முடியும். எனக்கு அப்பனா, எங்க அம்மாவுக்கு புருஷனாக, நீ இந்த வீட்டில இருக்குறதுக்கு நான் தடை சொல்லப் போறதில்ல. அதே நேரத்தில எங்கள அடக்கி ஆளணும், உன் இஷ்டத்துக்கு நாங்க நடக்கணும்ன்னு நினைச்சு, எங்கம்மாவ அடிக்கிறதா இருந்தா, உன்னை எதிர்த்து என்னாலும் அடிக்க முடியும். உன் மரியாதைய காப்பாத்திக்க, புரியுதா...'' என்றான் சண்முகம்.

♥இவ்வளவு நாள் வாயில்லாப் பூச்சியாக இருந்தவன், இன்று எதிர்த்து பேசுவதைக் கேட்டு விக்கித்து நிற்பவனை சட்டை செய்யாமல், கீழே விழுந்து கிடக்கும் அம்மாவை தூக்கி, ''எழுந்திரும்மா... போய் முகம் கழுவிட்டு, சோறு ஆக்கு. என் படிப்புச் செலவ ஏத்துக்க ஒரு மகராசன் தயாராக இருக்காரு; நீ ஆசைப்பட்டபடி பெரிய படிப்பு படிச்சு, ஆபீசரா வருவேன். கவலைப்படாதே,'' என்று அம்மாவை தன் தோளில் சாய்த்து ஆறுதல்படுத்த, தலைகுனிந்து நின்றான் சண்முகத்தின் குடிகாரத் தகப்பன்.

♥பரிமளா ராஜேந்திரன்

Post a Comment

0 Comments