HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

♥கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

♥கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்பதையும் அதை தவிர்க்கும் வழிமுறைகளையும் கீழே பார்க்கலாம்.

♥கர்ப்பப்பையின் கீழ் பகுதியானது பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய்போன்ற அமைப்பில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின் போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே இதை எதிர்த்து வெற்றி பெறுகிறது.

♥சில பெண்களுக்கு இந்த கிருமியானது சில நாட்களுக்கு உடலுக்குள்ளேயே காத்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலத்தில் தாக்குலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் இயல்பாக உள்ள செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் அடைந்த இந்த செல்கள் அதிவேகத்தில் பெருக்கம் அடைந்துவிடுகிறது.

♥இந்த செல்கள் இறப்பதில்லை. பாலியல் உறவின்போதே இந்த வைரஸ் கிருமியானது பரவுகிறது. என்ன தான் வைரஸ் கிருமியால் புற்றுநோய் பரவுகிறது என்றாலும் இளம் வயதிலேயே உடல் உறவு (15 வயதிற்கு கீழ்) பலருடன் உறவு, சிகரெட் பிடித்தல், சுகாதாரமற்ற நாப்கின் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில காரணிகள் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடுகிறது.

♥ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களால் ஹியூமன் பாப்பிலோமா வைரஸை எதிர்த்து போராட முடிவதில்லை.

♥கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்பட்டு இருந்தால் அதன் அறிகுறிகளானது எதுவும் தெரியாது. கர்ப்பவாய் புற்றுநோய் முற்றிய நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். இதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற வலியுறுத்தப்படுகிறது..

#அறிகுறிகள் :
♥பிரச்சனை முற்றிய சமயத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அதிகவலி அல்லது இரத்தபோக்கு ஏற்படலாம். வழக்கத்துக்கு மாறாக வெள்ளைப்படுதல், மாதவிலக்கின் போது இரத்தம் கட்டியாக வெளியேறுதல் அல்லது மிகக்குறைந்த அளவில் இரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். மெனோபாசுக்குபிறகு உதிரப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும்.

#தவிர்க்க_வேண்டியவை என்ன?
♥திருமணத்திற்கு முன்பான உடலுறவையும், புகைபிடித்தலையும் தவிர்க்கவேண்டும். 9 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். முதல் ஊசிக்கு பிறகு 8 வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ், 6 வாரங்கள் கழித்து மூன்றாவது டோஸ் என எடுத்துக்கொள்ளலாம். பெற்றோரும் சிறுவர்களும் இதை போட்டுக்கொள்ளலாம். பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பூசி போட்டாலும் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோயை தடுக்கலாம்

Post a Comment

0 Comments