HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பருவமடையும் வயதில் இருந்தே பெண்கள் மார்பகங்களை பராமரிக்கும் பிராவை அணியத் துவங்கிவிடுகின்றனர்

♥பருவமடையும் வயதில் இருந்தே பெண்கள் மார்பகங்களை பராமரிக்கும் பிராவை அணியத் துவங்கிவிடுகின்றனர். பல ஆண்டுகளாக பிராவைப் பயன்படுத்தி வரும் பெரும்பான்மையான பெண்களுக்கே இன்னும் அவர்களின் சரியான அளவு என்ன என்பது தெரிவதில்லை. மார்பகங்களுக்குச் சற்று கீழ்ப்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகத்தின் அளவுக்குத் தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை. சரியான அளவு இல்லாத பிராக்களால் தோற்றம் சிறப்பாக வெளிப்படாது, உடல்ரீதியாகவும் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

♥உள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டி-ஷர்ட் என ஆடைத் தேர்வுக்கு ஏற்ப பிராவை அணிந்தால் தோற்றம் அழகுறும். தளர்ந்து போயிருக்கும் மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்க ‘அண்டர் வயர்டு பிரா'(Underwired Bra) பயன்படுகிறது, எடைக் கூடுதலாக உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம். மார்பகம் சிறியதாய் உள்ளதே எனக் கவலைகொள்ளும் பெண்கள் ‘பேடட் பிரா'(Padded Bra)க்களைப் பயன்படுத்தலாம். இப்படிப் பிராக்களில் பல அம்சங்கள் உள்ளன. பெண்கள் ஒரே மாதிரியான பிராக்களை உபயோகிக்காமல், உடுத்தும் உடைகள், தாங்கள் செய்யும் வேலை, செல்லும் இடத்தைப் பொறுத்து ஐந்து அல்லது ஆறு வகையான பிராக்களை வைத்திருத்தல் அவசியமாகும்.

#டீனேஜ் பிரா (TeenageBra):  ♥முதல்முறையாக பிரா பயன்படுத்தும் பெண்கள் டீனேஜ் பிராக்களை பயன்படுத்தும்போது, அசௌகர்யமின்றி இருக்கலாம். எவ்ரிடே பிரா (Everyday Bra): எளிமை, குறைந்த எடை மற்றும் பராமரிக்க எளிதாக இருக்கக்கூடிய பிரா இதுவாகும். தினசரி ஆடைகளுக்குப் பயன்படுத்தலாம்!

#டி_ஷர்ட் பிரா (T-Shirt Bra):
♥மெல்லிய டாப்ஸ் மற்றும் டி- ஷர்ட்களைப் பயன்படுத்தும் பெண்கள் இந்த வகை பிராவைப் பயன்படுத்தலாம்.

#புஷ்அப் பிரா (Push Up Bra):
♥பெண்களுக்கு எடுப்பான மார்பகத்தைக் கொடுக்கவும், தளர்ந்த மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்கவும் புஷ் அப் பிராக்கள் உதவுகின்றன.

#பிரைடல் பிரா (Bridal Bra):
♥பிரத்யேகமாக திருமணத்திற்காகவே தயாரிக்கப்படுபவை பிரைடல் பிராக்கள். இந்தப் பிராக்களில் புஷ் அப், ஃபிரன்ட் ஓப்பன் (Front Open), லாங்லைன் (Longline) உள்ளிட்டப் பல வகை அம்சங்கள் உள்ளன.

#நர்சிங் பிரா (Nursing Bra):
♥இவ்வகை பிராக்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கானது. சாதாரண பிராக்களில் ஊக்குகள் பின்பகுதியில் இருப்பதால், அதனை அணிந்திருக்கும்போது குழந்தைகளுக்கு உடனடியாக பாலூட்டுவது சிரமம். நர்சிங் பிராவில் முன்பகுதியில் இருபக்கமும் பட்டன் இருப்பதால் தாய்மார்களுக்கு பாலூட்ட வசதியாக இருக்கும்.

#ஃபிரன்ட்_ஓப்பன் பிரா (Front Open Bra):
♥இந்தப் பிராவில் ஊக்கு/கொக்கி முன்பகுதியில் அமைந்திருக்கும். பின்பகுதியில் ஊக்குபோட சிரமப்படுபவர்கள், இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்தலாம்.

#ப்ளஸ்சைஸ் பிரா (Plus Size Bra):
♥மார்பளவு பெரிதாக இருக்கும் பெண்கள் ப்ளஸ் சைஸ் பிராக்களைப் பயன்படுத்தலாம். இவ்வகையான பிராக்கள் மார்பகத்தை முழுமையாக உள்ளடக்கிக்கொள்ளும்.

#ஸ்ட்ராப்லெஸ் பிரா (Strapless Bra):
♥தோள்பட்டை ஸ்ட்ராப் இல்லாத ஆடைகளை (Strapless Dresses) அணியும்போது, ஸ்ட்ராப்லெஸ் பிராக்கள் உதவியாக இருக்கும்.

#கேஜ் பிரா (Cage Bra):
♥லோ நெக் டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை அணியும்போது இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்துவது வசதியாக இருக்கும். இது தவிர, பிராலெட் பிரா (Bralette Bra), கேமி பிரா (Cami Bra), ஸ்டிக் ஆன் பிரா (Stick On Bra), டியூப் பிரா (Tube Bra) எனப் பலவகையான பிராக்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான ஆடைக்கும் ஏற்றபடி இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்தினால் சௌகரியமாக இருப்பதுடன் தோற்றமும் சிறப்பாக இருக்கும். எனவே, இவற்றின் பெயர்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு அடுத்தமுறை உள்ளாடைகளை சமர்த்தாக ஷாப்பிங் செய்யலாம்

Post a Comment

0 Comments