ஒருவருக்குத் திடீர் சந்தேகம் வந்தது தன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?ஆனால் இதை மனைவியிடம் நேரடியாகக் கேட்க அவருக்குத் தயக்கம். தயக்கம் என்ன, பயம் தான்.இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .இருபது அடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப் பாருங்கள் , மனைவியின் காதில் விழவில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்,பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக் கொண்டேநெருங்கிச் சென்றுப் பேசுங்கள்.எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுக் கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம் என டாக்டர் சொன்னார். அதைக் கேட்டவுடன் அந்தக் கணவனுக்கு ஒரே குஷி.உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக் கேட்டார்.பதில் எதுவும் இல்லை. பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டார். அதற்கும் பதில் இல்லை , ஹாலில் இருந்து கேட்டார் , சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். மனைவியிடமிருந்து பதிலே இல்லை.போச்சு இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டது போல என்று மனதில் கன்ஃபார்ம் செய்து விட்டார்.கடைசி வாய்ப்பாக மனைவியின் காது அருகே சென்றுச் சத்தமாக இன்றைக்கு என்ன சமையல் ?“ எனக் கேட்டார்.காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரைக் கோபமாக திரும்பிப் பார்த்து, ”ஏன் இப்படி கத்துறீங்க , நீங்களும் வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து , ஹாலில் இருந்து , சமைலறை வாசலில் இருந்து கேட்க , கேட்க நானும்முருங்கைக்காய் சாம்பார் , உருளைக்கிழங்கு பொரியல்னு சொல்லிக்கிட்டே இருந்தேனே , அது உங்கள் காதில் விழவில்லையா ?காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்கீங்கஎனப் பொரிந்துத் தள்ளிவிட்டாள்...இப்போது தெரிகிறதா…பிரச்சினை யார் காதில் என்பது ?கதையின் நீதி :-இப்படித் தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…இந்தப் பதிவு சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் கூடத் தான் √
- Home-icon
- Mega Menu
- Menu
- _About us
- _Contact us
- _Sitemap
- _Abishak Ram Admin
- Our website
- _Radio FM
- _Automation
- _Videos World
- _Samayal
- _Tamil New Year
- _Wishes
- _Abishak Ram Admin
- _Abishak Ram
- category
- _அப்பா
- _அம்மா
- _அப்பா அம்மா
- _ஆண்கள்
- _பெண்கள்
- _ஆண்கள் பெண்கள்
- _கணவன்
- _மனைவி
- _கணவன் மனைவி
- _மகன்
- _மகள்
- Service
- _Electrical Automation
- Online Service
- _Online Radio
- _Online TV
- Doc
- _Privacy Policy
- _Disclaimer
- _Terms and conditions
- _Abishak Ram
0 Comments
Thank you