♥கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் சென்று கேட்டாள்...
"உனக்குத் தம்பி பாப்பா வேண்டுமா, அல்லது தங்கை பாப்பா வேண்டுமா?" என்று...
"உனக்குத் தம்பி பாப்பா வேண்டுமா, அல்லது தங்கை பாப்பா வேண்டுமா?" என்று...
♥மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.
♥"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, சற்றும் யோசிக்காமல் "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.
♥திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.
♥"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே!
♥தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!
♥ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!
♥உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.
♥தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.
♥இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.
♥கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.
♥கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.
♥நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.
♥உலகத்தமிழ் மங்கையர் மலர் - பிரான்ஸ்
0 Comments
Thank you